ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் 165 கருக்கலைப்புகள் நடப்பதாக வெளியாகியுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012 – 13 கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 59,470 கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தமிழகத்தின் குடும்ப நலத் துறை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கையினால், இந்தியாவில் கருக்கலைப்பு அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் உத்தரப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.
இதிலும், இன்னும் பதிவு செய்யப்படாத சில சிறிய மருத்துவ மையங்களிலும், ஏராளமான பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இதுவும் பதிவு செய்யப்பட்டால், தமிழகம் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவும் வாய்ப்பு உண்டு.
கடந்த 6 ஆண்டுகளாக எடுத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் கருக்கலைப்பு எண்ணிக்கை எந்த வகையிலும் மாறாமல் ஒரே அளவில் உள்ளது. இது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பாடததையே காட்டுகிறது.
கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசுகள், கருக்கலைப்பு என்ற ஒரு சமூக பிரச்னையை இதுவரை கருத்தில் எடுத்துக் கொள்ளாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
கணவரின் கையெழுத்து, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம், மருத்துவ ஊழியர்களின் நடவடிக்கை, பயம் போன்ற காரணங்களால் ஏராளமான பெண்கள் பதிவு செய்யப்படாத மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர்.
முன்பிருந்ததை விட, தற்போது ஏராமான அரசு மருத்துவமனைகளும், மையங்களும் ஆங்காங்கே வந்து விட்ட நிலையிலும், அரசு மையங்களுக்கு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள வருவது அதிகரிக்கவில்லை என்பதும், கருக்கலைப்பு எண்ணிக்கை குறையவில்லை என்பதும், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றன.
இது மட்டும் அல்லாமல், ஆணுறையை தவிர்த்து பெண்களின் உடல் நலத்தை பாதிக்காத கர்ப தடுப்பு முறைகள் இந்தியாவில் மிகவும் குறைவு என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

0 comments:
Post a Comment