Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 March 2014

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு ஏற்ற வயிறு இல்லாமல், கர்ப்பிணி போன்று வீங்கி இருப்பதாலே ஆகும். அதே சமயம் அனைவரது மனதிலும் இனிமேல் நாம் கடுமையான டயட்டை பின்பற்றி, ஒல்லியாக மாற வேண்டுமென்ற எண்ணமும் எழும். ஆனால் சிலரைப் பொறுத்தவரை அது வெறும் பேச்சாக இருக்கும். சிலரோ சரியாக சாப்பிடாமல், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காதவாறு டயட் இருப்பார்கள்.

ஆனால் அப்படி கடுமையான டயட் இல்லாமல், மிகவும் ஈஸியாக, டயட்டில் இருப்பது போன்றே தெரியாதவாறு, எப்போதும் இருப்பது போல் சாதாரணமாக இருந்தாலே தொப்பையை குறைக்கலாம் என்று சொன்னால், அதிலும் இரண்டே வாரங்களில் எளிதாக தொப்பையைக் குறைக்கலாம் என்று சொன்னால் நம்பமாட்டோம். ஆனால் அந்த வழியைக் காண அனைவரும் ஏங்குவோம். என்ன சரி தானே!
இதைப் படித்து அவற்றை பின்பற்றி தொப்பையை இரண்டே வாரங்களில் குறையுங்கள்.

நன்கு தூங்கவும்

நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

உப்பை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.

காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.

தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.

நன்கு மூச்சு விடவும்


தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்

இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்


நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நடக்கவும்

எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.

சைக்கிள் ஓட்டவும்

சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.


நீர்ச்சத்துள்ள பழங்கள்


நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

மெதுவாக சாப்பிடவும்

எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.

நன்கு வாய்விட்டு சிரிக்கவும்

தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.

பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி


தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்.

0 comments:

Post a Comment