Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 16 March 2014

ரஹ்மான் இசைகூடத்தில் கலாட்டா!

ஒரு புதிய இசை ஆல்ப பணிக்காக எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணி இருக்கும். எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான்.

நேராக என்னுடைய சவுண்ட் எஞ்ஜினியரிடம் சென்று ‘எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்டான். அவனது குரலை கேட்ட அனைவரும் திகைத்துப் போய் விட்டனர். குரல் வந்த திசையை பார்த்த நானும் ஒரு கணம் ஆச்சரியத்தில் பிரமித்து போய் நின்று விட்டேன்.

கட்டாயமாக ஏழு மணி நேரமாவது நான் உறங்கி, ஓய்வெடுக்க வேண்டும் என உபதேசித்து, என்னை கையோடு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்த என் மகன் அமீன்தான் அந்த சிறுவனம். அவனைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க 10 நிமிடங்களுக்கு மேல் நான் போராட வேண்டியதாகி விட்டது.

அதன் பிறகு, எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு, நான் உறங்க செல்லும்படி ஆகி விட்டது. ஹும்... காலம் தான் எவ்வளவு வேகமாக விரைந்தோடுகிறது? குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை. எனது மகன் அமீன், இன்னும் குழந்தை இல்லை என்பதை நான் உணர்ந்த தருணம் இது," என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment