முடி வளரலைனா எண்ணெய் விளம்பரத்துல நடிச்ச நடிகையும் தான் பொறுப்பு...
விளம்பரங்களைப் பார்த்துத்தான் இன்று கிட்டத்தட்ட எல்லோரும் பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பிரபலங்கள், நடிகர் நடிகையர் நடித்தால் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு இப்போது ஒரு செக்கப் வைக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்.
அதாவது விளம்பரங்களில் வரும் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தெரிய வந்தால் அதில் நடித்தவர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமாம்.
தேங்காய் எண்ணை முதல் மாப்பு வரை
தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணை முதல் தரையில் துடைக்கும் மாப்பு வரை சரியாக இல்லாவிட்டால், அதை விளம்பரம் செய்தவரையும், அதில் நடித்தவரையும் நுகர்வோர் கோர்ட்டுக்கு இழுக்க முடியுமாம்.
நுகர்வோர் கவுன்சில்
மத்திய அமைச்சர் கே.வி. தாமஸின் கீழ் இயங்கி வரும் மத்திய நுகர்வோர் கவுன்சில் இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்துள்ளது. மேலும் இதற்காக தனியாக துணைக் கமிட்டியை ஏற்படுத்தவும் அது தீர்மானித்துள்ளது.
தவறான பொருட்களை
இதுதொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தவறான பொருட்களை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரங்கள் குறித்துத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டதாம்.
உணவுப் பொருட்கள்
குறிப்பாக உணவுப் பொருட்கள், தலையில் பூசும் எண்ணை, சுகாதாரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மம்முட்டி,மோகன்லால், விக்ரம், விஜய், ஷாருக் கான்
தற்போது தென்னிந்திய பிரபல நடிகர்களான மம்முட்டி,மோகன்லால், விக்ரம், விஜய், ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் விளம்பரங்களில் நடிக்கின்றனர். அதேபோல வட இந்தியாவிலும் பல திரை நட்சத்திரங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment