Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

'துப்பாக்கி' படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி என்பதாலும், விஜய்க்கு இது 57வது படம் என்பதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்கத்தாவில் விஜய் வில்லனைத் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார்கள்.

விஜய்க்கு வில்லனாக  பெங்காலி நடிகர் டோடா ராய் சௌத்ரி நடிக்கிறார். கதைப்படி டோடா ராய் ஒரு இன்டர்நேஷனல் தாதா. அவரை இந்தியாவுக்குத் தந்திரமாக வரவைத்து பிடிக்க லோக்கல் கிரிமினலான விஜய்யின் உதவியை போலீஸார் நாடுகிறார்கள்.

அப்படி திட்டமிட்டு வில்லனை கொல்கத்த வரவைத்த விஜய், அவரை சேஸ் செய்து பிடிக்கும் காட்சிகளைத்தான் தற்போது படமாக்கிவருகிறார்களாம்.இதனால் ஜெயிலுக்கு செல்கிறார் டோடா ராய். அதற்குப் பிறகு விஜய்யைப் பழிவாங்கப் புறப்படுகிறார். ஆனால், விஜய் மாதிரி இரண்டு பேர் இருப்பதைப் பார்த்து குழப்பம் அடைகிறார்.

இதில் யார் கிரிமினல் விஜய்? இன்னொரு விஜய் என்ன செய்கிறார்? வில்லனுக்கும் - விஜய்க்கும் ஏற்படும் மோதல் எப்படி முடிகிறது? என்பதுதான் படத்தின் கதை. விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.

டோடா ராய் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகளை எடுப்பதற்காக வரும் பிப்-21ல் ராஜமுந்திரிக்கு கிளம்புகிறார்கள் படக்குழுவினர்.இன்னும் பெயர் ஏதும் வைக்கப்படாத இந்தப்படம் தற்போதைக்கு விஜய்யின் 57வது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment