Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

சிவாஜி தி பாஸ்!

சிவாஜி கணேசன் மகத்தான நடிகர். ஆனால், சில படங்களைப் பார்த்தபோது சிவாஜி தவிர வேறு யாரும் அந்தக் காட்சிகளில் நடித்திருக்க முடியாது எனத் தோன்றியது. அப்படிப்பட்ட சில சிவாஜி எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளைப் பார்த்து யாம் பெற்ற இன்பத்தை நீங்களும்...

'திரிசூலம்’ படத்தில் குரு, சங்கர் என்று அண்ணன் தம்பிகளாக இரண்டு சிவாஜிகள். பிரிந்த அண்ணன் தம்பிகளை தேங்காய் சீனிவாசன் சேர்த்துவைத்ததும்,  கடத்திச் செல்லப்பட்ட தங்கள் அம்மா(?) கே.ஆர்.விஜயாவை மீட்க இருவரும் கிளம்புவார்கள். வழக்கமாக அம்மாவை மீட்கக் கிளம்பும் டபுள் ஹீரோக்கள் வெறிகொண்ட வேங்கைகளாக, சினம்கொண்ட சிறுத்தைகளாகக் கிளம்புவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம்.

 ஆனால், 'திரிசூலம்’ படத்திலோ இரு சிவாஜிகளும் மூணாறு ஹில்ஸ் வியூ பார்க்கச் செல்பவர்கள்போல் ஓப்பன் ஜீப்பில் ஏறி 'இரண்டு கைகள் நான்கானால்...’ என பாட்டுப் பாடி ஜாலி ட்ரிப் அடிப்பார்கள். கொஞ்சம் சாதுவான சிவாஜி லேசாக ஹம் செய்தபடி ஜீப் ஓட்ட, குறும்புக்கார சிவாஜி ஜீப்பின் கம்பிகளைப் பிடித்தபடி மிகுந்த சிரமப்பட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் சிவாஜியின் தோள்களில் ஏறி அமர்ந்து ஜாலி ரியாக்ஷன்கள் காட்டுவார்.

 உலக சினிமா வரலாற்றில் அம்மாவை மீட்கச் செல்லும் மகன்கள் ஜாலி காட்டுவதும், வண்டி ஓட்டுபவர் தோளில் ஏறி அமர்ந்து உறவுகளின் நெருக்கத்தைக் காட்டி ரசிகர்களை உறையவைத்ததும் சிவாஜி என்ற ஒருவர்தான்.

ஒரு நாள் டி.வி. சேனல் மாற்றிக் கொண்டிருந்தபோது சிவாஜி பட்டுச் சட்டை வேஷ்டி அணிந்து யாரிடமோ பவ்யமாக பதில் அளித்துக்கொண்டிருந்தார். இடையிடையே

'கிழிச்ச

மூஞ்சியப் பாரு...

ச்சீய்

மடையா

பல்லை உடைப்பேன் ராஸ்கல்

அறிவு கெட்டவனே

ஏண்டா பாவி

மனுசனா நீ ?’ என ஏகத்துக்கும் வசவுகள் வேறு.

பிறகுதான் புரிந்தது. சிவாஜி சண்டை போட்டுக்கொண்டிருந்தது அவரின் மனசாட்சியுடன் என்று. கிழி கிழி கிழி என்று கிழித்தது மனசாட்சி தான். கொஞ்ச நேரம் அமைதி யாக வசவு வாங்கிக்கொண்டிருந்தவர் திடீரென மனசாட்சியை வெறிகொண்டு வெளியே தள்ளி கதவைத் தாழிடுகிறார். ரூமிற்குள் சென்றவர் இருப்புக்கொள் ளாமல் அங்குமிங்கும் அலைந்துவிட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்து,

'அப்பா மனசாட்சி, எங்கடா போயிட்ட?

நீயும் என்ன தனியா விட்டுட்டுப் போயிட்டியா?

கோவிச்சுக்காத. வாடா’ என கட்டிங் குடிக்கக் காசு கொடுக்காததால் கோபித்துக்கொண்டு சென்ற பக்கத்து மேன்சன் நண்பனைக் கூப்பிடுவதுபோல மனசாட்சியைக் கூப்பிடுகிறார். மனசாட்சியும் கதவைத் திறந்து உள்ளே வந்து 'சக்கப்போடு போடு ராஜா’ என்று பாடுகிறது. மனசாட்சியுடன் மானாவாரியாக மல்லுக்கட்டியது  சிவாஜி ஒருவர்தான். 'பாரதவிலாஸ்’ படம் பாருங்கள். சிவாஜியின் மனசாட்சி சண்டைக் காட்சியைப் பார்த்து சிலிர்த்திடுங்கள்.

'திருப்பம்’ என்று ஒரு படம்.

சவுக்குக் காட்டிற்குள் பீச் மணலில் சிவாஜி மிகுந்த சிரமப்பட்டு ஒரு சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு புதையப் புதைய நடந்து வருவார். திடீரென நாலைந்து ரவுடிகள் சிவாஜியைச் சூழ்ந்துகொண்டு ''ஏய்! மரியாதையா பெட்டிக்குள் இருக்கிறத எடு'' எனக் கேட்க சிவாஜியும் பம்மிப் பயந்தவராக மெல்ல அந்தப் பெட்டியை திறக்க, அங்கதான் இருக்கு ட்விஸ்ட்.

பெட்டிக்குள் இருந்து. ஏ.கே.47-ஐ எடுத்து அத்தனை வழிப்பறிக் கொள்ளையர்களையும் என்கவுன்ட்டர் செய்வார்.

அதற்குப் பின்தான் தெரிகிறது சிவாஜி புதிதாக அந்த ஊருக்கு ரவுடிகளை ஒழிக்க வந்திருக்கும் போலீஸ் அதிகாரி என்று.

சவப்பெட்டி விற்கும் நாகர்கோவில் சூசை என்றுதானே சிவாஜி கெட்-அப் பார்த்த யாருமே நினைக்க முடியும். பாவம், அந்த வெள்ளந்தி ரவுடிகளும் அப்படித் தானே நினைத்திருப்பார்கள். இப்படி போங்கு ஆட்டம் ஆடிட சிவாஜி ஒருவரால்தான் முடியும். அதனால்தான்,  சிவாஜி... தி பாஸ்!

0 comments:

Post a Comment