Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 15 February 2014

காமெடி, கீமெடி பண்றாங்க!

நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த விஷயங்களில் ஒன்று வடிவேலு டயலாக். வடிவேலு காமெடி அட்ராசிட்டி டயலாக்குகள் இப்போதும் உலகத் தமிழர்களுக்குத் திருவாசகம். ஊரப்பாக்கம் ஓ.எம்.ஆர். பக்கத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரும் சாஃப்ட்வேர் மக்களுக்கு வடிவேலுதான் இப்போதைக்கு எவர்க்ரீன் என்டர்டெய்னர். இதோ ஒரு நாளில் நம் இன்ஜினீயர் நண்பரின் மைண்ட் வாய்ஸில் வடிவேலு எத்தனை இடங்களில் ஒளிந்திருக்கிறார் என சின்னதாய் அலசிப் பார்ப்போமா?

காலையில எழுந்திருக்கும்போதே 'துரை இன்னிக்கு சீக்கிரமாக் கௌம்பிட்டாரு போல’ என ரூம் மேட்ஸ் தங்களுக்குள் கிசுகிசுப்பார்கள். 'ஆஹா, கௌம்பிட்டாய்ங்கய்யா கௌம்பிட்டாய்ங்கய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்களே... இன்னிக்கு நாமதான் சமையல் செய்யணும்கிறதை ஞாபகப்படுத்தி ஃபிகரைப் பார்க்கவிடாமப் பண்ணிடுவாய்ங்களோ?’ என டர்ராகிவிடுவீர்கள்.

' டே நாறப் பயலே... வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கெல்லாம் இன்ஃபோசிஸ் பொண்ணுக்காகப் போய் பஸ் ஸ்டாப்புல‌ தேவுடு காக்குறியே... அந்த நேரத்துல நாலு லாங்வேஜ் கத்துக்கிட்டு இருக்கலாம். வேற நல்ல கம்பெனிக்காச்சும் ஷிஃப்ட் ஆகி இருக்கலாம். பொறம்போக்கு பொறம்போக்கு’ என்று திட்டித் தீர்ப்பார்கள். 'யூ மீன் வேஸ்ட் லேண்ட்... மணி கம் டுடே. டுமாரோ கோஸ்யா... பட் லவ் எவர் லாஸ்ட்டிங். ஸிங் இன் தி ரெயின்... ஐ அம் சொய்ங் இன் தி ரெய்ன்’ எனப் பாட்டுப் பாடி அங்கிருந்து எஸ்கேப் ஆகப் பார்ப்பீர்கள். ஆனால், பாத்ரூமில் இருந்து வந்த ஒருவன் புதுசாய் விட்ட இடத்திலிருந்து கன்டினியூ பண்ணுவான். 'ஆஹா... ஒரு மார்க்கமாத்தான்யா போய்க்கிட்டு இருக்காய்ங்கே’ என நினைப்பீர்கள். உங்கள் காதலுக்கு ஜால்ரா அடிக்கும் சீனியர் ஒருவரைத் தட்டி எழுப்பி சப்போர்ட்டுக்கு அழைப்பீர்கள். அவரோ, 'போன மாசம்தானடா லவ்வு கிவ்வெல்லாம் விட்டுட்டுப் படிக்கப்போறேனு தலையில அடிச்சு சத்தியம் பண்ணினே... அதெல்லாம் பொய்யா?’ என கேட்பார். 'அது போன மாசம்... இது இந்த மாசம்’ என்று டபாய்ப்பீர்கள்.

புதுசா ஒரு புரொஜக்ட் ஆரம்பிச்சு சிஸ்டத்தில் பிள்ளையார் சுழி போட்டால் ரொம்ப நேரமா சிஸ்டம் ஆஃப்லைன்ல சைலன்ட்டா இருக்குன்னு வையுங்க. நீங்க என்ன நினைப்பீங்க? 'என்ன இவ்வளவு யோசிக்குது.. எதுவும் சதி கிதி பண்ணப்போகுதா..?’னுதானே?

'டே, நீதான் அத்தனை டாஸ்க்கையும் ஒரே நாள்ல முடிக்கிற ஆளாச்சே. நீயே ஆன்ஸைட் ஒர்க்கை எல்லாம் பாருடா’ என எந்தப் பக்கியாச்சும் உங்களை பெரிய டார்கெட்டில் கோர்த்துவிடப் பார்க்கும். 'என்னா வில்லத்தனம்’ என்பதைப் புரிந்துகொண்டு, ' டே என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திவிட்டுத்தான்டா பூரா வேலையவும் என் தலையில கட்டிவிட்டுட்டு ஜோடிஜோடியா மாயாஜால்ல போய் உட்கார்ந்துக்கிறீங்க’ என்பீர்கள்.

எப்படியோ சமாளித்துத் தப்பித்தாலும் டார்ச்சருக்குப் பிறந்த டார்ச்சர்... மேனேஜரிடம் ஒரு நாள் எக்குத்தப்பாய் மாட்டிக்கொள்வீர்கள். அவர் ரூமுக்கு அன்பாக அழைத்து பவர்பாயின்ட்டில் படம் காட்டி ஃப்ளோ சார்ட், கிராஃப் அது இதுன்னு விளக்க வெங்காயம் உரித்து, கடைசியில் உங்கள் கண்ணில் நீர் வரவழைத்து லெக்சர் கொடுப்பார். 'சார் நான் பண்ணுற ஒர்க்ல என்ன தப்பு?’ என அப்பாவியாய்க் கேட்பீர்கள். 'ஆமா, நீ புடுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான். எப்போதான்யா ஒழுங்கா டீமை லீட் பண்ணப்போறே? உன்னை எல்லாம் எவன்யா ரெக்ரூட் பண்ணினான்?'' எனச்  சொல்லிக் காயப்படுத்துவார். அப்போது, 'இப்பவே கண்ணைக் கட்டுதே... ஆத்தி இம்புட்டு கோவக்காரன்னு நினைச்சுக்கூட பார்க்கலையே.

 ஷேவிங் பண்ண குரங்காட்டம் இருக்கானே... கடிச்சுவெச்சிருவானோ?’ என்று அப்பாவியாய் மைண்ட் வாய்ஸ், மைலாப்பூர் வரை போகும். ஒரு கட்டத்தில் உஷ்ணமாகி, 'கட்டத்துரைக்குக் கட்டம் சரியில்லை... நம்மகூட வெளாடுறதே வேலையாப்போச்சு’ என மனசுக்குள் மணியாட்டியபடி, 'எங்க அம்மா சத்தியமா நான் நல்லா வேலை செய்வேன் சார்... இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்’ என வான்ட்டடாக வண்டியில் ஏறிக்கொள்வீர்கள். ஒருவழியாகச் சமாளித்து சீட்டுக்கு வந்து உட்கார்ந்தால், ' உள்ளே அவருக்கே லெக்சர் கொடுத்த போல இருக்கு. சூப்பர்டா. உன் டேலன்ட் வருமா?' என கைப்புள்ளயாக்குவான் ஒரு டோங்கிரி மண்டையன். ஆனால், உள்ளே நடந்ததை ஒருத்தி ஒட்டுக்கேட்டிருப்பாள். 'என்னடா அவரு இந்த வாங்கு வாங்குறாரு. சைலன்ட்டா நின்னுட்டு இருந்தே. கம்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சவன்தானே நீயி... அப்புறம் ஏன்டா பேஸிக் விஷயத்துலகூட அவர் கேட்ட கொஸ்டீனுக்கு முழிச்சே?' என அலப்புவாள்.

பார்டரில் பாஸாகி டிகிரி வாங்கிய நீங்களோ ரொம்ப நல்லவனாய் மாறி, '’பில்டிங்கு ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு' என வெள்ளந்தியாய் சிரித்து சமாளிப்பீர்கள்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ''இப்படி ஒரே மொக்கைத்தனமாவே எழுதிட்டு இருக்கீங்களே பாஸ்... வேற ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணுங்களேன்'  என்றார்.  அவருக்கு நான் சொன்ன பதில்... 'ஆங்... அப்படின்னா ஒரு பேங்க் வெச்சுக் குடுங்க நடத்துறோம்’

அவரோட ரியாக்ஷன்... ''அவ்வ்வ்வ்வ்வ்வ்!'

0 comments:

Post a Comment