மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் த்ரிஷா.
சமீபத்தில் கொச்சின் சென்றிருந்தார் த்ரிஷா. அங்கு அவர் அளித்த பேட்டி: தமிழ் படங்கள் கேரளாவில் நன்றாக ஓடுகிறது என்பது எனக்கு தெரியும்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்தையும் கேரள ரசிகர்கள் வரவேற்று ரசிக்கிறார்கள்.
எனக்கும் மலையாள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
மல்லுவுட் ஹீரோ மோகன்லால்தான் எனக்கு பிடித்தமான ஹீரோ. கேரளா எனக்கு மிகவும் பிடித்த இடம்.
3 மாதத்துக்கு ஒருமுறை நான் கேரளாவுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறேன். எனது நிறைய பட ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது.
கவுதம்மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா‘ படமும் இங்குதான் படமானது.
என்னுடைய பாட்டி பாலக்காட்டில்தான் வாழ்ந்து வருகிறார். அவரை பார்க்க அடிக்கடி நான் பாலக்காடு வருவேன்.
நான் நடித்துள்ள ‘பூலோகம்‘ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தற்போது கன்னட படமொன்றில் நடித்து வருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

0 comments:
Post a Comment