Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 7 March 2014

உலர் சருமத்திற்கு உகந்த பழங்கள்!

பட்டர் ஃப்ரூட் உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது. இது வெளியில் பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.


பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.


ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம்.


லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக் கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில் ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம். பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம் கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment