Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 28 February 2014

மான் கராத்தே ஆடியோ வெளியீடு திடீர் ஒத்திவைப்பு! - ரசிகர்களை குழப்பும் விளம்பரம்!

மான் கராத்தே படத்தின் ஆடியோ வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மான் கராத்தே. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். முருகதாஸின் முன்னாள் உதவி இயக்குனர் திருக்குமரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


படத்தின் கதை, திரைக்கதை முருகதாஸ். எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் தயாரிப்பு. இசை அனிருத். படத்தில் இசையமைப்பாளர் தேவாவும், நடிகை ஸ்ருதி ஹாசனும் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர். இதில் தேவா பாடிய பாடலுக்கு சிவகார்த்திகேயனும், அனிருத்தும் இணைந்தும் ஆட்டம் போட்டுள்ளனர்.


இந்நிலையில் படத்தின் ஆடியோ மார்ச் 1ம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.


பாடல்களை மெருகேற்றும் பணிக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் இந்த ஒத்திவைப்பு என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதே செய்தியை ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது. ஆனால் ரசிகர்களை குழப்பும் வகையில் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் ‘மான் கராத்தே’ விளம்பரத்தில் ‘அனிருத் இசை நாளைமுதல்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

0 comments:

Post a Comment