Pages

Subscribe:

Ads 468x60px

Tuesday, 18 March 2014

கர்ப்பகால குமட்டலை சமாளிப்பது எப்படி?



கர்ப்பகால குமட்டல் பிரச்னைகளை ஒவ்வொரு பெண்ணும் சந்தித்தே ஆக வேண்டும். குமட்டல், மசக்கை தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலர் குமட்டலை சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் போகும்.

அறிகுறிகள்: காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுவதும் குமட்டல் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மசக்கை போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெற இந்த மகளிர் தினத்தில் மகளிர் நலன் கருதி சில யோசனைகளையும் வழிமுறைகளையும் நான் கூற விரும்புகிறேன்.

உணவில் கவனம் தேவை: தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை எளிதில் சமாளிக்கலாம். காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்த உடனே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தவிர்க்க...: குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கு ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொள்ளவும். பிரச்னை தராத, அதே சமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுங்கள்.

கர்ப்ப காலத்தில் நுகர்தல் உணர்வு அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள். தளர்ச்சியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெüகரியத்தை உண்டாக்கும்.

குமட்டலைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள். அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் "எலக்ட்ரோலைட்' சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சீறுநீர்ப் பரிசோதனை செய்து கொள்ள டாக்டரிடம் செல்லுங்கள்.

0 comments:

Post a Comment