நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள்.
“என்னால மட்டும் யார்கிட்டேயும் நல்ல பேர் வாங்கவே முடியலை!” ஆதங்கத்துடன் சொன்னவருக்கு ஆலோசனைகள் சொல்ல முற்பட்டார் நண்பர். “அப்படியா! நல்லபேர் வாங்கறதை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நாளை அலுவலகம் போனதும், எல்லாரிடமும் நல்லா சிரிச்சுப் பேசுங்க!”
“சேச்சே’, கோமாளின்னு சொல்லீடு வாங்கப்பா!”
“சரி! அழுத்தமா, ஆழமா, முகம்பார்த்து உறுதியா பேசுங்க!”
“அய்யய்யோ! திமிர் பிடிச்சவன்னு சொல்லிடுவாங்க!
“ஓ… அப்படீன்னா, குழைவா மென்மையா பேசுங்களேன்!”
“நீங்க வேறே! ரொம்ப வழியறதா நினைச்சுடுவாங்க! நான் நடந்துக்கற விதம்தான் சரி. ஆனா நல்லபேர் வாங்கவே முடியலை”.
இவரைத் தெரிகிறதா. இவர் தன் முன் முடிவுகளால் மூச்சுத்திணறும் மனிதர். எல்லாவற்றிலும் அவசரப்பட்டு தப்புத்தப்பான முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டு திணறுபவர். இவரால் வாழ்க்கையுடனும், மனிதர்களுடனும் ஒட்டவே முடியாது. ஏன் தெரியுமா? வாழ்க்கையின் மிக அற்புதமான அம்சமே, ஒவ்வொரு விநாடியும் கணிக்க முடியாதவை என்பதுதான்.
பரிசுகள், பரவசங்கள், சவால்கள், வெற்றிகள் இவை எல்லாமே எதிர்பாராமல் எதிர்கொள்கிற போதுதான் அர்த்தமுள்ளவை ஆகின்றன. தங்கள் கணிப்பைத் தாண்டி எதுவுமே நிகழக்கூடாது என்று எண்ணுபவர்கள், வாழ்வை மிகக் குறுகிய வட்டங்களுக்குள் அடக்க முயல்பவர்கள். அவர்களுடைய எல்லைகளைக் குறுக்கிக் குறுக்கி, ஓட்டுக்குள் சுருங்கும் ஆமைபோல் உள்ளுக்குள் ஒடுங்குவார்கள்.
மிகப்பெரிய அறிவாளிகளும் மேதைகளும் கூட சின்னஞ்சிறிய பின்னடைவுகளோ தோல்விகளோ வந்தால்கூடத் தடுமாறி விடுகிறார்களே. ஏன்? அவர்கள் நிபந்தனைக்குட் பட்டு காரியங்கள் நிகழாதபோது கலங்குகிறார்கள்.
நாம் பார்க்கும் மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்களென்றால் நம் எதிர் பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்தே எல்லாம் நிகழும். நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள்.
கன்ப்யூசியஸ், வாழுங்காலத்தில் பெரிய மேதையாய் மதிக்கப்பட்டார். அவருக்கு ஆயிரமாயிரம் சீடர்கள். அவர்களில் அநேகம்பேர் அரசர்கள். அவர் காலத்தில் வாழ்ந்த மகத்தான ஞானி, லாவோட்சு. ஒருமுறை கன்ப்யூசியசுக்கு லாவோட்சுவைப் பார்க்க விருப்பம் வந்தது. பிரபலங்களால் எங்கேயும் தனியாகப் போகமுடியாது. நூற்றுக்கணக்கான சீடர்கள் கன்ப்யூசியஸைப் பின் தொடர்ந்தார்கள்.
லாவோட்சு வசிக்கும் குகைக்கு வெளியே அனைவரையும் நிறுத்திவிட்டு கன்ப்யூசியஸ் உள்ளே நுழைந்தார். கண்விழித்த நிலையில், மிக அமைதியாய் ஆடாமல் அசையாமல், ஓர் அகல் விளக்கு போல் அமர்ந்திருந்தார் லாவோட்சு.
உள்ளே நுழைந்த கன்ப்யூசியஸை அவர் கண்டு கொள்ளவேயில்லை. மூன்று நான்கு முறை தொண்டையை செருமியும் கனைத்தும் காண்பித்த பிறகும் லாவோட்சுவிடம் சலனமேயில்லை. பொறுக்க முடியாமல், கன்ப்யூசியஸ் உரக்கச் சொன்னார், “நான் கன்ப்யூசியஸ்”.
லாவோட்சு நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், “அதனாலென்ன! கன்ப்யூசியஸாகவே இருங்கள்!” இவருக்கு தூக்கிவாரிப் போட்டது. சமாளித்துக் கொண்டு சொன்னார், “எனக்குக் கொஞ்சம் பேச வேண்டும்”.
லாவோட்சு சொன்னார், “அதனாலென்ன! பேசுங்கள்! உங்களுக்கு பதில் சொல்லத்தான் இங்கு யாருமில்லை!!” கன்ப்யூசியஸ் அதிர்ந்து போனார்.
லாவோட்சு அகந்தையில் பேசவில்லை. அவரால் சலனப்படமுடியாது. பிறர் எதிர்பார்ப்புக் கேற்ப வளைந்துகொடுக்க முடியாது. கன்ப்யூசியசுக்கோ அவர் எதிர்பார்ப்பதுதான் நடக்க வேண்டும்.
கன்ப்யூசியஸ் மெல்லச் சொன்னார், “நான் போய்விட்டு வேறொரு சமயம் வருகிறேன்”. கடகடவென்று சிரித்துவிட்டு லாவோட்சு சொன்னார். “பொய் சொல்லாதீர்கள்! நீங்கள் ஒரு போதும் இங்குவர விரும்ப மாட்டீர்கள்!!
அடுக்கடுக்கான அதிர்ச்சி கன்ப்யூசியஸைக் கரைத்தது. அவருக்குள் இரும்பாய் இருந்த பிடிவாதம் இளகியது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொள்ள லாவோட்சுவுடன் நிகழ்ந்த சந்திப்பு உதவியது. நம் எல்லோருக்குமே ஒரு லாவோட்சுவை சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால், இறுக்கத்தை உடைக்க இன்னொருவர் வரும்வரை காத்திருக்க வேண்டாம். முன் முடிவுகளை உடையுங்கள். முக மலர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்……… திறந்த மனதோடு!

0 comments:
Post a Comment