Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 21 February 2014

முதுகுவலிக்கு முதலுதவி இருக்கு...!

முதுகு வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏதேனும் விபத்து மூலமாகவும் விளையாடும் போதும் கீழே விழுதல், அதிக எடையுள்ள பொருட்களைத் முதுகில் தூக்குதல் அல்லது தோள்பட்டையில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குதல் மேலும் உடற்பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி வருவதுண்டு. மேலும் அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருதல், நடத்தல் அல்லது படுத்தல், முதுகை வளைத்து உட்காருதல், தவறான முறையில் சுமை தூக்குதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி வருவதுண்டு.

முதுகு வலி வந்ததும் சில நாட்களுக்கு முதுகுக்கு ஓய்வு தரவும். முதுகுக்கு சுமை தரக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.

முதுகு வலியை குணப்படுத்த வெறும் தரையில் மல்லாக்கப் படுத்து, முழங்கால் மற்றும் மூட்டுகளைச் சற்று மடக்கி, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் முதுகு வலி குணமாகும்.

ஐஸ் கட்டியைப் பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்தப் பையால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தரலாம். பொருள்களை இழுப்பது, தள்ளுவது தூக்குவது கூடாது. அடிக்கடி குனிதல் கூடாது.

ஒவ்வொருமுறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ்கட்டி ஒத்தடம் தரலாம்.. இப்படி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்குத் தரலாம். வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். வலிநிவாரணி களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரலாம்.

முதுகுவலி நீடிக்குமானால், மருத்துவர் உதவியை நாடவும். முதுகுப்பிடிப்பை எடுக்க முயலாதீர்கள். முதுகுப்பிடிப்பைத் தவறாக எடுத்துவிடும்போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.

முதுகுவலி குறைந்த பின்னர், முதுகுத் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வயிற்றுத் தசைகளுக்கும் கால் தசைகளுக்கும் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்வது மிக நல்லது. முறையான யோகாசனப் பயிற்சிகளும் உதவும்.

0 comments:

Post a Comment