போடா போடி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதற்கு பிறகு விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது பாலாவின் படத்தில் நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் வரலட்சுமி கமிட் ஆகாமல் இருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் சிலர் நடிக்க வாய்ப்பு கொடுத்தபோதிலும், அந்த கதை எதுவும் பிடிக்காததால் நடிக்க மறுத்துவிடுகிறாராம் வரலட்சுமி.
வருகிற வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளுகிறார் வரலட்சுமி என்று கோலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இப்போது முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதைபற்றி வரலட்சுமியிடம் கேட்டபோது, “நான் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கும் என் குடும்பத்திற்கும் கிடையாது.
அப்புறம் ஏன் நடிக்க வந்தீங்க என்று கேட்காதீர்கள், நான் நடிக்க வந்ததே ஆத்ம திருப்திக்காகத்தான்.
பணத்திற்காக எனக்கு பிடிக்காத கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாலாவின் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் படத்தின் பெயரை தற்போது “தாரை தப்பட்டை’ என்று மாற்றியுள்ளார்கள்.
இந்த படத்திற்காக தினமும் 4 மணிநேரம் ஹோம் ஒர்க் பண்ணுகிறார் வரலட்சுமி. கரகாட்ட கலைஞர்களிடம் தினமும் பயிற்சி செய்து வருகிறார்.
இவருடைய இந்த ஆர்வத்தை பார்த்த பாலா நேரில் வந்து பாராட்டினாராம். பாலாவிடம் பாராட்டு வாங்கிய ஒரே நடிகை இவர் ஒருவராகத்தான் இருப்பார் என்கிறது கோலிவுட்.
0 comments:
Post a Comment