திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்கு 'ரஜினி முருகன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்க, பொன்ராம் இயக்கத்தில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இமான் இசையமைக்க, மதன் தயாரிப்பில் வெளிவந்தது.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் பல்வேறு முன்னணி நடிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. இக்கூட்டணியை மீண்டும் இணையும் படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது.
தற்போது 'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கும் 'டாணா' என்னும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படத்தினைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்திற்கு 'ரஜினி முருகன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படம் முழுவதும் தீவிர ரஜினி ரசிகனாக காமெடி கதகளி ஆட திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment