சம்மர் டூர் டிப்ஸ்
சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன்பு பழைய டயரி ஒன்றில் சுற்றுலாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை நம் நினைவில் வரவர எழுதிக்கொண்டு வாருங்கள். பேக்கிங் சமயம் இந்த டயரி பேருதவியாய் இருப்பதுடன் நம் டென்ஷனையும் பெருமளவில் குறைக்கும்.
< சில்லறைப் பிரச்னை என்றாலும் அதுதான் எல்லா இடங்களிலும் நம்மை டென்ஷன் படுத்தும். எனவே டூர் போகும்போது பத்து, இருபது, ஐம்பது ரூபாய் நோட்டுக்களைக் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள்.
< முன்பதிவு செய்த டிக்கெட், அறை எனில் அதன் ரசீது, முக்கியமான தொலைபேசி எண்கள், முகவரிகள் என எல்லாவற்றையும் பிரதி எடுத்து அதை ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ள, சமயத்தில் கை கொடுக்கும்.
< கோடை சுற்றுலா போகும்போது அதிக அளவில் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்த்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தவும். பணம் தொலைந்து போகுமே என்ற பயத்தையும் தவிர்க்கலாம்.
< டிராவல்ஸ் காரில், டூரிஸ்ட் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஓட்டுநரின் தொலைபேசி எண்ணைக் கட்டாயம் வாங்கிக் கொள்ளுங்கள். சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் தொலைவில் இருந்தால்
வண்டியைத் தேடி அது எங்கே இருக்கிறது என அலையும் நேரமும், சிரமமும் மிச்சமாகும்.
< கோடை பயணத்துக்கு வயதான உங்கள் தாய், தந்தை கூட வருவதாக இருந்தால் அவர்கள் தினமும் அருந்தும் டானிக்குகளையும், மருந்துகளையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். குளிர் அதிகமான இடத்துக்குப் போகும்போது அதற்கேற்ப ஸ்வெட்டர், மங்கி கேப், மஃபளர் போன்றவற்றையும் எடுத்துச் செல்லவேண்டும்.
< சுற்றுலாவில் மலை ஏற, ஏற நமக்கு காது அடைப்பதுபோல, குத்துவலிபோல உணர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க மலையேறும் சமயம் வாயில் ஒரு மிட்டய் அல்லது சாக்லேட்டைப் போட்டுச் சுவைத்துக்கொண்டே சென்றால் அதுபோல உணர்வு ஏற்படாது.
< விரலசைவில் வியக்க வைக்கும் தகவல்களைத் தரும் இண்டர்நெட்டை பயணத்தின்போது முழுதாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் போகும் இடத்தின் முக்கிய சிறப்பு அம்சங்கள், ஹோட்டல்கள், பாரம்பரியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சென்றால் பயணம் பயனுள்ளதாக அமையும்.
< கோடை சுற்றுலாவின்போது நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. யாத்திரையின்போது அவை தொலைய நேரிட்டாலும் பேங்கில் புகார் கொடுக்க அந்தப் பிரதி உதவும்.
0 comments:
Post a Comment