Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 21 March 2014

காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டாதீர்!


நமது உடல் உறுப்புகளை நாம் தினமும் பராமரிக்க வேண்டும். காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் வேலையே காதுகளை பாதுகாப்பது தான்.  நமது தாடை அசைவின் போது தானாகவே அழுக்குகளை வெளி யேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. கையில் கிடைத்த பொருட்களையெல்லாம்  காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக்கூடாது.


ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் ஓட்டை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம். காதில் எண்ணெய் விடுவதும் தவறான  செயல் ஆதலால் தேவைப்படும் போது காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் சென்று காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.


காது வலி, காது அடைப்பு, அல்லது காதில் இருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில்  நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர்  வெளியேறி அடைப்பு தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்தித் துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.


காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே காது குத்த வேண்டும். காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய்  தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எந்த சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால்  குழந்தையின் காதில் பிரச்சினை இருக்கலாம். பள்ளியில் கவனக் குறைவாகவும், மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால் காதில் நீர் கோர்த்து இருக்கலாம்.


மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ பேச ஆரம்பிப்பதில் தாமதம் காட்டினாலோ  உடனே காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக்  கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.


காதுக்குள் பூச்சி ஏதேனும்  புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவி யாகும். தொடர்ந்து ஓசை எழும்பும்  தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய  மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். ஜலதோசம் ஏற்பட்டு விட்டால் மூக்கைச் சிந்தும்போது மிகப் பலமாக சிந்துவது கூடாது.  இவ்வாறு  செய் தால் காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.


நெருங்கிய ரத்த உறவு களுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதி யர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாக காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த உடனேயே மஞ்சள் காமாலையாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும்  குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம்  பரிசோதனை செய்வது அவசியம்.


பெருத்த ஓசையுடைய வெடிகளை வெடிப்பதும் ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும் காதருகே அறைவதும் காதுகளுக்கு தீங்கு  விளைவிக்ககூடிய செயல்கள். தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஓயாமல் இயர்போனில் பாட்டுக்கேட்பதையும் தவிர்க்கவும். சிலருக்கு எந்த  காரணமும் இன்றி காதுகேட்கும் திறன் தீடீரென பாதிக்கப்படலாம்.


இதற்கு திடீர் கேட்புத்திறன் இழப்பு என்று பெயர். காது சம்பந்தமான பிரச்சினைகளை  காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். 

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை..!


உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.


இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.


நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.


இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.


கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.


சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.


திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

Thursday, 20 March 2014

பித்த பிரச்சனைகளை தீர்க்கும் ரோஜா!


ரோஜா ஒரு மணமலர் மட்டுமல்ல. மிகச்சிறந்த மருத்துவ மூலப்பொருளும் ஆகும். ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.. நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.


உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும். காதில் கட்டி ஏற்பட்டு கடுமையான வலியுடன் சீழ் வந்தால் மின்மினிப் பூச்சியென்றை பிடித்து ரோஜா இதழ்களுடன் சேர்த்து அரைத்து இலேசாக சுடவைத்து காதில் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் விட்டு வந்தால் விரைவில் உடைந்து சிரியாகிவிடும்.


எந்த பிரச்சனையால் சீழ் வந்தாலும் நின்றுவிடும். காதில் என்ன காரணத்தால் வலி குத்தல் இருந்தாலும் அபினியைச்சுட்டு சாம்பலாகச் செய்து அந்தச்சாம்பலை இரண்டு அரிசி அளவில் எடுத்து ரோஜா பூவினால் தயாரிக்கப்பட்ட தைலத்துடன் கலந்து இலேசாகச் சூடு செய்து இரண்டிரண்டு சொட்டுகள் வீதம் காதில் விட்டு வர வேண்டும்.


பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும், சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி, பித்தக்கோளாறுகள் வெள்ளை முதலிய பிணிகள் விலகிவிடும்.


ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம். வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப்போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம். 

அம்மை, பரு தழும்புகள் மறைய இயற்கை வைத்தியம்!


கசகசா, மஞ்சள் துண்டு 2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.


இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.


எலுமிச்சை வைத்தியம்

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.


கருமை நீங்க

அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.


முகப்பரு அகல


அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.


இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும். 

பாலாவிடம் பாராட்டு பெற்ற ஒரே நடிகை இவர்தானாம்!!!


போடா போடி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதற்கு பிறகு விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார்.


ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது பாலாவின் படத்தில் நடித்து வருகிறார். வேறு எந்த படத்திலும் வரலட்சுமி கமிட் ஆகாமல் இருக்கிறார்.


தயாரிப்பாளர்கள் சிலர் நடிக்க வாய்ப்பு கொடுத்தபோதிலும், அந்த கதை எதுவும் பிடிக்காததால் நடிக்க மறுத்துவிடுகிறாராம் வரலட்சுமி.


வருகிற வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளுகிறார் வரலட்சுமி என்று கோலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இப்போது முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.


இதைபற்றி வரலட்சுமியிடம் கேட்டபோது, “நான் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கும் என் குடும்பத்திற்கும் கிடையாது.


அப்புறம் ஏன் நடிக்க வந்தீங்க என்று கேட்காதீர்கள், நான் நடிக்க வந்ததே ஆத்ம திருப்திக்காகத்தான்.


பணத்திற்காக எனக்கு பிடிக்காத கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.


இந்நிலையில் பாலாவின் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் படத்தின் பெயரை தற்போது “தாரை தப்பட்டை’ என்று மாற்றியுள்ளார்கள்.


இந்த படத்திற்காக தினமும் 4 மணிநேரம் ஹோம் ஒர்க் பண்ணுகிறார் வரலட்சுமி. கரகாட்ட கலைஞர்களிடம் தினமும் பயிற்சி செய்து வருகிறார்.


இவருடைய இந்த ஆர்வத்தை பார்த்த பாலா நேரில் வந்து பாராட்டினாராம். பாலாவிடம் பாராட்டு வாங்கிய ஒரே நடிகை இவர் ஒருவராகத்தான் இருப்பார் என்கிறது கோலிவுட்.

விடலைப்பருவத்து இனக்கவர்ச்சி..?


அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப்பருவத்துக் காதல் நமக்கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்திருப்போம். இன்னும்  சொல்லப்போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம்தான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக்கிறது. அறியாத வயதில்  திருமணம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்துக்குள் வந்த கதைகளைக்  கேட்டிருப்போம்.


இன்றைய இளம்பிராயத்தினருக்கு தான் ‘தனியாள்’ எனச் சொல்லிக் கொள்வதில் கவுரவக் குறைச்சல். 15 வயதில் வாலிப வாசலில் நிற்கிற  அவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக்கிறார்கள். அவர்கள் பார்க்கிற திரைப்படங்களும், அவர்களது ஆஸ்தான  நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையும் அதை வலியுறுத்துகின்றன.


டீன் ஏஜில் இப்படி அவர்களுக்குள் பூக்கும் உறவும், அது தரும் நெருக்கமும், தாய்ப்பாச நெருக்கத்தைப் பிரதிபலிப்பதாக சில ஆராய்ச்சிகள்  தெரிவிக்கின்றன. அந்த உணர்வு, போதை மருந்து எடுக்கும் போது மூளையில் உண்டாகிற உணர்வுக்கு நிகரானது என்றும் அவை சொல்கின்றன. அது  ஒரு ஆனந்த அனுபவமாகவும் அடிமைத்தனமாகவும்கூட உணரப்படும்.


டீன் ஏஜ் காதலுக்கு 3 முகங்கள் உண்டு.


1. ஈர்ப்பு.

2. நெருக்கம். அது காலப்போக்கில் காம ஈர்ப்பாகவும் மாறலாம்.

3. இணக்கம் மற்றும் உணர்வுரீதியான கமிட்மென்ட். அதாவது, அந்த உறவை காலத்துக்கும் தொடரச் செய்ய வேண்டிய பொறுப்பு.


வயது முதிர்ந்தவர்களிடம் இணக்கம் ஏற்படும். ஆனால், டீன் ஏஜில் நெருக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழும். டீன் ஏஜில் உண்டாகிற இந்த  ஈர்ப்பு பெரும்பாலும் வந்த வேகத்திலேயே காணாமல் போவது சகஜம். ஆனாலும், அந்த அனுபவம் விடலைப் பருவத்தினரின் வாழ்க்கையில்  முக்கியமானதாக அமையும். இந்த ஈர்ப்புக்குள்ளாகும் பதின்ம வயதினர், நேரிலோ, தொலைபேசியிலோ மணிக்கணக்கில் பேசுவது சகஜம்.


இன்னொருவருடன் நெருக்கம் வளர்க்கிற இந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் தம்மைத் தாமே உணர்வார்கள். அந்த நெருக்கத்தில் பகிர்தலும்  நம்பிக்கையும் வெளிப்படையான குணமும் உருவாகும். அது தரும் பக்குவம், அதன் தொடர்ச்சியான புதிய உணர்வுகள் போன்றவற்றின் விளைவாக  மன முதிர்ச்சி மலரும். அதே நேரத்தில் பெரும்பாலான விடலைப்பருவத்தினருக்கு உடல்ரீதியான தேடல்களும் ஆரம்பமாகும். அந்த வயதில்  ஊற்றெடுக்க ஆரம்பிக்கிற ஹார்மோன்கள்தான், விடலைப்பருவத்து செக்ஸ் தூண்டுதல்களுக்கு அடிப்படை.


அது அவர்களுக்கு அதுவரை அனுபவித்திராத புதிய அனுபவமாக இருக்கும். டீன் ஏஜில் செக்ஸ் ரீதியான சிந்தனைகளும் ஈர்ப்புகளும் தலைதூக்கும்  ஒரு சிலருக்கு இதெல்லாம் குழப்பத்தைத் தரும். இதெல்லாம் அதீதமாகச் சுரக்கும் ஹார்மோன்களின் தூண்டலின் விளைவே தவிர வேறில்லை. இந்த  உடற்கூற்றின் முடிவு இனப்பெருக்கம். இந்த உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொது. ஆண்களுக்கு இந்தத் தூண்டுதல், எந்தவிதமான உணர்வுப்  பிணைப்பும் இல்லாமல் செயல்படும்.


அதுவே பெண்களுக்கு, அது உணர்வுடன் தொடர்புள்ள விஷயமாகிப் போவதால்தான், ‘ஐ லவ் யூ’ சொல்கிற ஆண்களிடம், பெண்கள் சுலபமாக  ஈர்க்கப்படுகிறார்கள். இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத வயது அது. இன்றைய சமுதாயத்தில், இந்த இனப்பெருக்க உந்துதல்,  அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், மதப்பற்று மற்றும் இதர காரணிகளால் பக்குவப்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் மனிதர்களை விலங்குகளிடமிருந்து  தனித்து இயங்கச் செய்வது அவர்களது ஆறறிவு.


அந்த ஆறறிவைப் பயன்படுத்தி, தனது பொறுப்புகளையும், செயல்களையும், அவற்றின் பின்விளைவுகளையும் சிந்திக்கிற பதின்ம வயதினர்,  இக்கட்டத்தை பாதிப்பின்றி கடந்து விடுவார்கள். பக்குவம் குன்றியவர்கள், ஹார்மோன்களுக்கு அடிமையாகி, பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.  விடலைப்பருவத்துக் காதல் மிகமிகச் சாதாரணமானது என்றாலும், அதை அப்படியே அலட்சியமாக விடவும் முடியாது.


டீன் ஏஜில் பூக்கும் இத்தகைய காதலை, அடுத்தடுத்த கட்டங்களுக்கு – அதாவது, பள்ளிப்பருவத்துக் காதலை, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்  வரை கொண்டு போகிறவர்களும் உண்டு. இத்தகைய உறவில் விழும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, படிப்பு உள்பட, விளையாட்டு, கலை என வேறு  விஷயங்களின் மீது கவனம் திரும்பாமலேயே வாழ்க்கை நகரும்.


இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு என்ன?


உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ, எதிர்பாலினத்து நட்பிடம் எப்படிப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்கிறார்கள் என்பதைக்
கண்காணியுங்கள்.


உங்கள் மகனோ, மகளோ, அந்த உறவில் அதிக ஈடுபாடு காட்டுவது தெரிந்தால், அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொடுங்கள். குறிப்பிட்ட அந்த  நபருடன் போன் அல்லது சாட்டிங்கில் தொடர்பு கொள்ள, நேரக்கெடு விதியுங்கள். மற்ற நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட ஊக்கப்படுத்துங்கள்.


அந்த நபருக்காக விலை உயர்ந்த அன்பளிப்புகளை வாங்கித் தருவதை ஊக்கப்படுத்தாதீர்கள். உடையோ, நகையோ அன்பளிப்பாகப் பகிரப்படுகிற  பட்சத்தில், அதை உபயோகிப்பதில் எதிராளிக்கு ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தை உணர்த்துங்கள். ரொம்பவும் பர்சனலான அந்த அன்பளிப்புகள், அந்த  நபரின் மீதான உங்கள் பிள்ளையின் கமிட்மென்ட்டை மறைமுகமாக உணர்த்தக்கூடிய அபாயத்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.


அதைத் தவிர்த்து சிடி, புத்தகங்கள் அல்லது வாழ்த்து அட்டைகள் பாதுகாப்பானவை என எடுத்துச் சொல்லலாம். ஒரு வேளை அன்பளிப்புகள் ஏற்றுக்  கொள்ளப்படாவிட்டால், அதைக் கொடுத்தவரின் உணர்வுகள் புண்படக்கூடும் என்பதையும் சொல்லுங்கள்.


அந்த வயதில் உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட உணர்வு தற்காலிகமானது என்று உங்களுக்குத் தெரியும். ஆனாலும், உங்கள் பிள்ளையின் உணர்வுகளுக்கு  மதிப்பளியுங்கள். உங்களை நம்பி தனது புதிய உறவு குறித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, அதைக் கிண்டலோ, கேலியோ  செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், அடுத்த முறை உங்கள் பிள்ளைகள் தம் விஷயங்களை மறைக்கவே முயற்சிப்பார்கள். உங்கள் குடும்பத்துக்கு எது  முக்கியம் என்பதையும், அந்த வயது உறவு பற்றியும் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.


ஹார்மோன்களின் தாக்கம் பற்றியும், அதனால் உண்டாகும் இனக்கவர்ச்சி பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். யாருடன் உறவு பாராட்டலாம் என்பது  குறித்து உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். குறைந்த பட்சம் படிப்பறிவு, ஒழுக்கம், பக்குவம் நிறைந்தவர்களுடன் பழகுவதால் ஏற்படும் ஆதாயங்களைப்  புரிய வையுங்கள். அப்படிப்பட்ட நட்பை உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுத்தால் ஊக்கப்படுத்துங்கள்.


அதே நேரம் கவனத்தை சிதறடிக்காமல், அந்த உறவைக் கண்காணிப்பது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். எதைச் செய்யலாம், எதைச்  செய்யக்கூடாது என உங்கள் பிள்ளைகளிடம் விவாதியுங்கள். அவர்களது உறவு எல்லை மீறும் போது, உங்கள் பிள்ளையை எச்சரியுங்கள். காமம்,  பாலுறவில் ஈடுபடுவது, பால்ய வயது கருத்தரிப்பு, பாலியல் வியாதிகள் போன்றவற்றின் இன்னல்களையும் எடுத்துச் சொல்லுங்கள். தேவைப்பட்டால்  உங்கள் பிள்ளையின் நண்பரின் பெற்றோரிடமும் பேசுங்கள். 

ராத்திரி நேரத்துல விஜய்யும் – முருகதாஸும் அந்த இடத்துல என்ன பண்றாங்க?


துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.


 இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்திலும் வெற்றிகரமாக முடிந்தது.


தற்போது மூன்றாவது கட்ட படபிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் ரகசியமாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடப்பட்டது.


அதில் முதல் வேடம் சாதாரணமாக எல்லா படங்களிலும் விஜய் வரும் கெட்டப்பில் நடிக்கிறார். இரண்டாவது வேடம், இதுவரை விஜய் நடித்திராத புதிய கெட்டப் என்பதால், அந்த கெட்டப் வெளியே தெரிய கூடாது என்பதற்காக படப்பிடிப்பை இரவு ஷிப்ட்டாக மாற்றிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.


இரண்டாவது ஷிப்ட் படப்பிடிப்பு தினமும் இரவு 7மணி முதல் அதிகாலை 4மணிக்கு முடிகிறது. ராமோஜி பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படக்குழுவினர் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.


மாலை 6ஆறு மணிக்கு அனைவரும் வெளியேறிய பின்னர் இரவு 7மணிக்கு மேல் ரகசியமாக படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

அவசியம் அறிய வேண்டிய மூலிகை மருந்துகள்..?

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுததுச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.


2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.


3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.


4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.


5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.


6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.


7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.


8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்


9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.


10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.


11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.


12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும். 

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?

கர்ப்பம் தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை.

சில நேரங்களில் கர்ப்ப காலத்திற்குள்ளேயே தானாக கலைந்து விடுகிறது. இதனை கருச்சிதைவு என்கிறோம். இது தானாக ஏற்படும் கருச்சிதைவு ஆகும்.

பொதுவாக இந்த கருச்சிதைவு 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படும்.

கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் இல்லாதபோதுதான் கருச்சிதைவு ஏற்படுகிறது.

பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த அல்லது ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. ஒரு வகையில் பார்த்தால் இதுபோன்ற பிறப்புகளை தடுக்கிறது கருச்சிதைவு என்று சொல்லலாம்.

மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் கருப்பையில் வளர வேண்டிய கரு, கருப்பையில் அல்லாமல், கருவகத்திற்குச் செல்லும் குழாயில் வளர்ச்சியடைவதால் ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் தடைபட்டு கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு ஆகிறது.

இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று பெண் உறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுதல், மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் அதிகமான வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும். பின் அதிகரிக்கும். ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தால் ரத்தம் கட்டி கட்டியாக வெளிப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் கருச்சிதைவு, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போலத்தான் இருக்கும்.

கருப்பையில் உருவான கரு சிதைவடைந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் ரத்தப்போக்கு நிற்கும். அதுவரை ரத்தப்போக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2 முதல் 4 வாரங்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். இந்த நாட்களில் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு முழுமையாக கருச்சிதைவு ஆகாமல், சில திசுக்கள் கருப்பையிலேயே இருக்கும். இதனால் தொடர்ந்து ரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி இருக்கும். அந்த சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

கருச்சிதைவு முழுமை அடையாமல் தேங்கியிருக்கும் திசுக்களால், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாயில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்காலத்தில் கருவுறும் தன்மையையே இழக்கச் செய்யும் அளவிற்கு செல்லும்.

கருச்சிதைவு ஆன பெண்கள், அடுத்து கர்ப்பம் தரிப்பதற்கு சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு சில பெண்களுக்கு கருச்சிதைவானது திரும்பத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டு முறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு ஏற்படின், அடுத்த கர்ப்ப காலத்திற்குள் அந்த பெண், மருத்துவரின் முழுமையான பரிசோதனைக்குட்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே கர்ப்பம் தரித்தல் நிகழ வேண்டும்.

இவை அல்லாமல் குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு, கர்ப்பம் தரித்த பின் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் தங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது.

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்ததை அறிந்ததும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம். 

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்..!!

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்.


நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.


இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம். இப்போது அது எவ்வாறு என்று பார்ப்போமா!!!


சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.


கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.


பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.


தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.


டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும். 

பல் பாதுகாப்பு...?

சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு  நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி...

பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques)  அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப்பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள்.  பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது.  வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும்.  பற்களுக்கு இடையே யுள்ள (Inter dental surfaces)  இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன (inter dental cleaning aids)

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing)  எனப்படும்.  இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.  இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss)டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள்.  அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும்.  இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது.  இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும்.  மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி  மெல்ல வளைத்து  மெதுவாக தேய்த்து விடவேண்டும்.  வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும்.  இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும்.  நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும்.  இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே  அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம்.  நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

முக அழகை கெடுக்கும் முகப்பருவை தவிர்க்க 10 வழிகள்!

முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.

முகப்பருக்கள் எதனால் வருகிறது?

தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.

இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.

01. ஆவி பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

02. கராம்பு
கராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

03. அடிக்கடி முகத்தை கழுவுதல்
அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

04. சந்தன பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

05. தேன்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

06. எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

07. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

08. தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

09. வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

10. தண்ணீர் குடிக்கவும்
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம். 

கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்!



கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை.


இது போன்ற நோய்கள் ஏற்பட காரணம்……… “வெயிலில் அதிக நேரம் அலைவது, குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அதிகநேரம் அடக்குவது, அதிகமான காரவகை பலகாரங்கள், உணவுகளை உண்பதை நேரம் தவறி சாப்பிடுவது, ஓய்வின்றி திரிவது, உழைப்பது, நேரம் தவறி தூங்க செல்வது, இரவில் அதிக நேரம் கண்விழிப்பது, தலைக்கு எண்ணை தேய்ப்பதை தவிர்ப்பது, மலம் தினசரி கழிக்காமல் இருப்பது, காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை வெறுப்பது, தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, இறுக்கமான ஆடைகளை அணிவது, தரமில்லா துணிகளை (பாலிஸ்டர்) உடுத்துவது போன்ற காரணங்களால் மேற்கூறிய நோய்கள் ஏற்படக் கூடும்.


வியர்க்குருவை தடுக்க………… தினம் இருமுறை குளிக்க வேண்டும். மலத்தை அடக்க கூடாது. வெயிலில் வெகு நேரம் திரிவதை தவிர்க்க வேண்டும். அப்படியே திரிந்தாலும் உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க கருநிற குடைகளை தவிர்த்து வெள்ளை அல்லது பிறவண்ண குடைகளை பயன்படுத்தலாம். உடலை குளிர்விக்கும் பழங்கள், இளநீர், மோர், பதனீர், வெள் ளரிக்காய், நொங்கு, தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். நேரம் தவறி தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக்கூடாது. நூல் ஆடைகளை பயன்படுத்த வேண்டும். காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும். முடிந்த வரையில் குளிர் நீரில் 2 முறை குளிக்க வேண்டும்.


இவையே வியர்க் குரு வராமல் தடுக்கும் வழிகளாகும். மேல் பூச்சாக ஒரிஜினல் சந்தனம் பூசலாம். பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்து குளிக்கலாம். திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை நீரில் கரைத்து தேய்த்து குளிக்க மறையும். மஞ்சள், சந்தனம், வேப்பிலை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.


வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்த்து 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வைத்திருந்து குளிக்கலாம். ஆஸ்த்துமா நோய், சைனஸ் நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.


அம்மை நோய்கள்……….. பெரியம்மை, விளையாட் டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர்படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மை நோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற் கொள்ள வேண்டும்.


தடுக்கும் வழிகள்……….. சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண்காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.

தவிர்க்கவே கூடாத விஷயம் இது...



உணவு சாப்பிடுவதற்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையை வகுத்துள்ளோம். இதற்கிடையில், மாலை நேரத்தில் சிறிய அளவிலான உணவுவகைகளை (நொறுக்குத் தீனி) சாப்பிடுகிறோம். மற்ற மூன்று நேரங்களில்... குறிப்பாக, உடலுக்கு புத்துணர்வைத் தரும் காலை உணவை சரியான அளவோடும், ஊட்டச்சத்து நிறைந்ததுமாய் சாப்பிடுகிறோமா என்பதுதான் கேள்வி.


காலையில், பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை, பொங்கல் என்பது எழுதப்படாத "மெனு'வாகிவிட்டது. இதில் என்ன ஊட்டச்சத்து உள்ளது? இதுபோன்ற உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், அன்றைய தினம் உடலுக்குத் தேவையான புத்துணர்வு என்பது கிடைக்காது. இதற்கு மாற்றாக கேழ்வரகு இட்லி, சம்பா தோசை, கோதுமை ரவா உப்புமா, போன்ற தானியங்களை கொண்டு, பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.


அரிசியில்தான் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசியும் தானிய வகைதான், ஆனால், வாரத்துக்கு ஓரிரு நாள் தவிர, மற்ற நாள்களில் அரிசி தவிர்த்த தானியங்களை கொண்டு சமைத்த உணவைச் சாப்பிடலாமே. முடிந்தால், பழங்களில் ஏதாவது ஒன்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் சரியான உடலமைப்பும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற ஊட்டசத்துடன், அன்றைய தினத்துக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.


இது ஒருபுறம் இருந்தாலும், காலை உணவையே தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் உண்டு. எப்படி தெரியுமா, வீட்டுவேலைப் பளு, சுவாமிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடுவதில்லை, காலை நேர பரபரப்பு போன்ற காரணங்களால் பெண்களில் பலரும், அலுவலகம், வியாபார விஷயமாக அவசரமாகச் செல்லும்போது ஆண்களும், அவசர அவசரமாக எழுந்து பள்ளிக்குப் புறப்படும் குழந்தைகளில் பலரும், நோய் காரணமாக முதியோர்களில் சிலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.


இதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் "ஹைட்ரோ குளோரிக்' அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே தவிர, உடல் எடை குறையாது.


வயிற்றில் உள்ள இரைப்பைக்குத் தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இரைப்பை சுருங்கத் தொடங்கிவிடும்.


ஒருநேரம் பட்டினி கிடந்து, மற்றொரு நேரம் சேர்த்து சாப்பிடலாம் என நினைப்பதும் தவறு. இந்த தவறை வெளியூர்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் ஆண்களில் பலர் செய்கின்றனர். கால தாமதமாக தூங்கி எழுந்து நேரடியாக மதிய உணவுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


மருத்துவர்கள், மருந்து சாப்பிடும்போது மூன்று, நான்கு வேளை என குறிப்பிடுவதுபோன்று, நாமும் உணவு சாப்பிடுவதில் கடைபிடித்தால் அஜீரணக் கோளாறு நோய்களிலிருந்து தப்பலாம்.


இடையிடையே நொறுக்குத்தீனி என்ற பெயரில் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவதும், சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவதால் உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.


அண்மையில், "இந்தியர்களின் காலை உணவு பழக்கம்' என்ற தலைப்பில் கெலாக்ஸ் நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாகவும், நாடு முழுவதும் 72 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காலை உணவைச் சாப்பிடுவதாகவும் தெரியவந்தது. மேலும், பெண்களிடம் ஊட்டச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவதோடு, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.


ஊட்டச்சத்து குறைவான காலை உணவை சாப்பிடுவதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சாப்பிடுவதில் தில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (38 சதவீதம் பேர்) உள்ளதாகத் தெரிவித்தனர்.


மேலும், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பெரும்பாலானோர் அலட்சியப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


உடலுக்கு எப்படி ஓய்வு தேவையோ? அதேபோல் நமது இரைப்பைக்கும் ஓய்வு தேவை. அதற்காக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இரவு நேரத்தில் குறைவாக சாப்பிட்டு, இரைப்பைக்கு ஓய்வு கொடுப்போம்.


நம்முடைய உடல் ஆரோக்கியம் நம் குடும்பத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்து, காலை உணவைத் தவிர்க்காமல் அளவோடும், ஊட்டச் சத்தோடும் சாப்பிட்டு நலமோடு வாழ்வோம்.

ஹோட்டல் சாப்பாடு யாரை பாதிக்காது...?



வியாபாரத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் உணவு விடுதிகளில் நாக்கிற்கு ருசி கிடைக்குமே தவிர, ஆரோக்கியத்தை எதிர்பார்க்க இயலாது.



பலருக்கும் சேர்த்து சமையல் செய்யும் இடங்களில் இரு உணவுப் பொருள்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருத்தல்,



 சமமாக அதாவது ஒன்றுக்கொன்று மாறுபடாத ஒரே தன்மையுடையதாக இருத்தல், சில குணங்கள் சமமாகவும் சில எதிரிடையாகவும் கலந்திருத்தல், மேலும் செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை போன்றவை கவனத்தில் வைத்துச் சமைக்கப்படாதிருத்தல் இயல்பே.



உணவிலுள்ள பகைப்பொருள்களாலும் ஐந்து வகையான நபர்களுக்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படுவதில்லை.



உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதில் உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் ஆகிய இந்த ஐந்து வகையான நபர்களுக்கு,  சமுதாயச் சாப்பாட்டின் மூலம் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.



எனவே, நீங்கள் தொடர்ந்து வெளியே சாப்பிட வேண்டிய நிலையில் இருந்தால், மேற்கூறியவற்றைப் பெற முயற்சி செய்து நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டியது அவசியம்.

இட்லியுடன் மோர் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால்...?



பலரும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி சாப்பிடுவோம். பிறகு குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு உடனே காபி சாப்பிடுவோம்.



ஆனால், இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி இந்த உணவு முறை சரியாக அமைவதில்லை.


காலையில் இட்லி சாப்பிடுகிறோம். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் இருக்கிறது.


உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.


ஆக, எது ஆரோக்கியத்தைத் தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது.


அதனால் இட்லியுடன் டீ குடிப்பதைவிட, மோர் சாப்பிடுவது நல்லது.



ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க வைத்துவிடும்.



அவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவாக இது அமையும்.

வடிவேலு உண்மையில் யாரை இழிவுபடுத்துகிறார்...? ஏன் தெனாலிரானை எதிர்க்கிறார்கள்!

ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.இதன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.


அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.ஏற்கனவே ‘இம்சை அரசன் 23–ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்தார். காமெடியுடன் சரித்திர கதையம்சத்தில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றிகரமாக ஓடியது.


அதே சாயலில் ‘தெனாலி ராமன்’ படத்தையும் எடுத்து இருக்கிறார்கள்.இதில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு நடித்து இருப்பதாகவும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் தமிழ்நாடு தெலுகு மக்கள் பேரவை கண்டித்து உள்ளது.



இது குறித்து அப்பேரவையின் மாநில தலைவர் பாலகுரு சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”‘ஜெக ஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவு படுத்துவது போல் வடிவேலு சில காட்சிகளில் நடித்து இருப்பதாக தெரிய வந்தது.



வடிவேலு  செயல் கிருஷ்ண தேவராயரையும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவுபடுத்துவது ஆகும்.இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வடிவேலு, படத்தின் டைரக்டர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் போன்றோருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.



படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தணிக்கை குழுவுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். இதையும் மீறி படத்தை வெளியிட முயன்றால் வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.”என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சம்மர் டூர் டிப்ஸ்...?

சம்மர் டூர் டிப்ஸ்

சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன்பு பழைய டயரி ஒன்றில் சுற்றுலாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை நம் நினைவில் வரவர எழுதிக்கொண்டு வாருங்கள். பேக்கிங் சமயம் இந்த டயரி பேருதவியாய் இருப்பதுடன் நம் டென்ஷனையும் பெருமளவில் குறைக்கும்.


 < சில்லறைப் பிரச்னை என்றாலும் அதுதான் எல்லா இடங்களிலும் நம்மை டென்ஷன் படுத்தும். எனவே டூர் போகும்போது பத்து, இருபது, ஐம்பது ரூபாய் நோட்டுக்களைக் குறிப்பிட்ட அளவு எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள்.


 < முன்பதிவு செய்த டிக்கெட், அறை எனில் அதன் ரசீது, முக்கியமான தொலைபேசி எண்கள், முகவரிகள் என எல்லாவற்றையும் பிரதி எடுத்து அதை ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ள, சமயத்தில் கை கொடுக்கும்.


 < கோடை சுற்றுலா போகும்போது அதிக அளவில் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்த்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தவும். பணம் தொலைந்து போகுமே என்ற பயத்தையும் தவிர்க்கலாம்.


 < டிராவல்ஸ் காரில், டூரிஸ்ட் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஓட்டுநரின் தொலைபேசி எண்ணைக் கட்டாயம் வாங்கிக் கொள்ளுங்கள். சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் தொலைவில் இருந்தால்
 வண்டியைத் தேடி அது எங்கே இருக்கிறது என அலையும் நேரமும், சிரமமும் மிச்சமாகும்.


 < கோடை பயணத்துக்கு வயதான உங்கள் தாய், தந்தை கூட வருவதாக இருந்தால் அவர்கள் தினமும் அருந்தும் டானிக்குகளையும், மருந்துகளையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். குளிர் அதிகமான இடத்துக்குப் போகும்போது அதற்கேற்ப ஸ்வெட்டர், மங்கி கேப், மஃபளர் போன்றவற்றையும் எடுத்துச் செல்லவேண்டும்.


 < சுற்றுலாவில் மலை ஏற, ஏற நமக்கு காது அடைப்பதுபோல, குத்துவலிபோல உணர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க மலையேறும் சமயம் வாயில் ஒரு மிட்டய் அல்லது சாக்லேட்டைப் போட்டுச் சுவைத்துக்கொண்டே சென்றால் அதுபோல உணர்வு ஏற்படாது.


 < விரலசைவில் வியக்க வைக்கும் தகவல்களைத் தரும் இண்டர்நெட்டை பயணத்தின்போது முழுதாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் போகும் இடத்தின் முக்கிய சிறப்பு அம்சங்கள், ஹோட்டல்கள், பாரம்பரியப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சென்றால் பயணம் பயனுள்ளதாக அமையும்.


 < கோடை சுற்றுலாவின்போது நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. யாத்திரையின்போது அவை தொலைய நேரிட்டாலும் பேங்கில் புகார் கொடுக்க அந்தப் பிரதி உதவும்.

ரஜினி முருகனா - காமெடி கதகளி ஆடப்போகும் சிவகார்த்திகேயன்!


 திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திற்கு 'ரஜினி முருகன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்க, பொன்ராம் இயக்கத்தில் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இமான் இசையமைக்க, மதன் தயாரிப்பில் வெளிவந்தது.


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வியாபாரம் மற்றும் வசூல் பல்வேறு முன்னணி நடிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. இக்கூட்டணியை மீண்டும் இணையும் படத்தினை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது.


தற்போது 'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கும் 'டாணா' என்னும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படத்தினைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.


இப்படத்திற்கு 'ரஜினி முருகன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படம் முழுவதும் தீவிர ரஜினி ரசிகனாக காமெடி கதகளி ஆட திட்டமிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

அழகான தோற்றம் வேண்டுமா..? கேரட் சாப்பிடுங்க..!


நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.


கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.


மேலும் கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.


கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும்.


கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.


நாம் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டால் கெடுதல் விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.


கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.


மேலும் கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.


கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும்.


கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையுடம், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பேருகும்.

இதுதான் சிவகார்த்திகேயனின் சுயரூபம்!!!

அது ஒரு புதுமுக ஹீரோ நடித்த படத்தின் ஆடியோ பங்ஷன்.

அந்த பங்ஷனுக்கு சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலமான இளம் ஹீரோவை அழைத்திருக்கிறார்கள். அவரும் வருவதாக ஓ.கே சொல்லி விட்டார். சொன்னவர் கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார்.

வந்தவுடன் மைக்கைப் பிடித்த அவர் ”நான் நடிச்ச படம் இந்த வாரம் ரிலீசாயிருக்கு. அதோட புரமோஷனுக்காக பிக் எப்.எம் வரைக்கும் போயிட்டு வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு. அதனால் தாமதமா வந்ததுக்கு உங்க எல்லார்கிட்டேயும் முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றவர் அடுத்து படத்தின் ஹீரோ முதல் டெக்னீஷியன்கள் வரை எல்லோரையும் மனதார பாராட்டி விட்டு இருக்கையில் அமர்ந்தார்.

விழாவில் பேச வேண்டிய கடைசி சிறப்பு விருந்தினர் அவர் மட்டும் தான் என்பதால் அவர் பேசி முடித்த கையோடு விழா நிறைவடைந்தது. விழா முடியவும் அங்கே இருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். அவருடன் கை குலுக்குவது, செல்போனில் போட்டோ எடுப்பது, அவருடன் பேச முற்படுவது என்று அவரை நெருங்கிக் கொண்டார்கள். அந்த கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டார் அந்த ஹீரோ. ஆனால் எந்த ரசிகரிடம் அவர் முகத்தை சுளிக்கவில்லை. மாறாக ரசிகர்களோடு ரசிகராகவே மாறிப்போனார்.

எத்தனை பேர் வந்தாலும் சளிக்காமல் சிரித்த முகத்தோடு கை குலுக்கினார். போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். என்னோட மொபைல்ல உங்களை போட்டோ எடுத்துக்கிறேன் என்று கேட்ட ரசிகரைக் கூட ஓ.கே ஜி எடுத்துக்கங்க ஜி என்று புன்னைகையோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

விழா முடிந்து சுமார் கால்மணி நேரமாகியும் கூட அவரை மொய்த்த ரசிகர் கூட்டம் அவரை விடவில்லை. அவர் மெல்ல மெல்ல எல்லா ரசிகர்களையும் சந்தித்துக் கொண்டே தனது கார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார். அங்கேயும் வெளியில் நின்று கொண்டிருந்த ரசிகர்கள் அவரை மொய்த்தார்கள். அப்போதும் கூட முகத்தில் வழிந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்து விட்டு சிரித்தவாறே ரசிகர்களுடன் மனம் விட்டுப் பேசினார்.

‘எளிமை’யின் மறுபெயர் விஜய் சேதுபதி! : ஹலோ மிஸ்டர் சிவகார்த்திகேயன் ஒரு நிமிஷம் இதை படிச்சிட்டுப் போங்க…

விழாக்குழுவினருக்கோ அவரை எப்படியாவது காருக்குள் ஏற்றி பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே என்கிற டென்ஷன். அதனால் விழாக்குழுவினர் அவரைச் சூழ்ந்த ரசிகர்களை பின்னே இழுத்து விட்டுவிட்டு அவரை நெருங்கி, சார் வாங்க போகலாம் என்று கூப்பிட்டார்கள். ஆனால் அவரோ ”ஜி பரவாயில்ல ஜி இவங்களை தள்ளி விடாதீங்க, இந்த இடமே இவங்க கொடுத்தது தானே? நான் பார்த்துக்கிறேன். அவங்களை ஒண்ணும் பண்ண வேணாம் ப்ளீஸ்” என்றார்.

அதன்பிறகு தனது காரில் அவர் ஏறிப்போகும் வரை தன்னைச் சந்திக்க வந்த எல்லா ரசிகர்களிடத்திலும் பேசிவிட்டுத்தான் போனார்.

அந்த எளிமையான பழகுதலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல…

இளம் ஹீரோ விஜய் சேதுபதி தான்.!

இந்த நிகழ்வு ‘சூறையாடல்’ என்ற படத்தின் ஆடியோ பங்ஷனில் நடந்தது.

இப்படி விஜய் சேதுபதியின் எளிமைக்கு எத்தனையோ உதாரணங்களை நேரில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் மிஸ்டர் சிவகார்த்திகேயன்!

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ”மான் கராத்தே” ஆடியோ பங்ஷனில் நீங்கள் என்ன செய்தீர்கள்?

உங்களை ஒரு பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்ள வேண்டும், தமிழ்சினிமாவில் உள்ள அத்தனை பேருடைய பார்வையும் உங்கள் மீதுதான் பட வேண்டும் என்று பேராசைப்பட்டீர்கள்.

அதற்காக உங்களை ரசிக்கும் நூற்றுக்கணக்கான ரசிகர்களை சத்யம் தியேட்டருக்கு காலங்காத்தாலேயே வர வைத்தீர்கள். ட்ரெய்லரில் உங்கள் முகம் வரும்போது விசிலடிக்கவும், கைதட்டவும் மட்டும் அவர்களை சுயநலமாக பயன்படுத்தினீர்கள். மாறாக எந்த ரசிகரையாவது அந்த விழாவில் உங்கள் அருகில் நெருங்க விட்டீர்களா..?

உங்களைச் சுற்றி பத்து பதினைந்து அட்யாட்களை வைத்துக் கொண்டு எந்த சராசரி ரசிகனையும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டீர்களே? இதுதான் உங்கள் எளிமையா?

மேடையில் ஆளாளுக்கு உங்களை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசியபோது அதை மறுத்துப் பேசாமல் மெளனமாக ஏற்றுக்கொண்டீர்களே? அதன் உள்ளர்த்தம் என்ன?

விழாவுக்கு வந்த பத்திரிகையாளர்களையும், திரையுலக பிரபலங்களையும் உங்கள் அடியாட்கள் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் நீங்களோ உள்ளே இந்த விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், பத்திரிகை, டிவி, வானொலி, இணையதள நண்பர்களுக்கும் நன்றி என்று சொல்லிக்கொண்டிருந்தீர்களே?

விழாவுக்கு வர வேண்டிய முக்கியமான சிறப்பு விருந்தினர்கள் வெளியே நின்று கொண்டிருந்த போது, பத்திரிகையாளர்கள் எல்லோரும் வெளியே நின்று கொண்டிருந்த போது உள்ளே யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருந்தீர்கள்?

ஒரு நல்ல நடிகனுக்கு முதலில் தேவை எளிமை. அந்த எளிமை தான் தியேட்டரின் 10 ரூபாய் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனை கூட காலா காலத்துக்கும் ரசிக்க வைக்கும். ஆனால் நீங்களோ பால்கனியில் உட்கார்ந்து கொண்டு பலான படத்தை பார்ப்பதைப் போல இருட்டுக்குள் அமைதியாக இருப்பவர்களுடன் மட்டுமே நெருக்கம் காட்ட ஆசைப்படுகிறீர்கள். அப்படித்தான் உங்கள் நடவடிக்கை இருந்தது.

எங்கே போனது உங்கள் எளிமை? அல்லது யாரைத் திருப்திபடுத்துவதற்காக இப்படிப்பட்ட ஒரு பகட்டான பாராட்டுகளை ஏற்றுக் கொண்டீர்கள்?

ஒரு நல்ல நடிகன் என்பவன் திரையில் எத்தனை வகையான முக பாவங்களையும் காட்டிவிட்டுப் போகலாம். ஆனால் சில துளிகள் அன்பு காட்டினாலே உங்களை கேட்காமல் சொந்த செலவில் கெட்-அவுட்ட்டுக்கு பல லிட்டர் பாலில் பாலாபிஷேகம் செய்கிறானே? அப்படிப்பட்ட ரசிகனிடம் ஒரு நிமிடமாவது உங்களது நிஜமான அன்பை வெளிப்படுத்தலாமே? அதில் என்ன பஞ்சம் வந்து விடப்போகிறது?

நீங்களாவது நீங்கள் நடித்த படத்தின் பங்ஷன்களில் மட்டும் தான் கலந்து கொள்கிறீர்கள். ஆனால் விஜய் சேதுபதியோ தான் நடிக்காத படமாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அந்த படக்குழுவினரை மனதார பாராட்டி விட்டுச் செல்கிறார். வரும்போது தனியாகத்தான் வருகிறார். விழா முடிந்து போகும் போது கூட தன்னிடம் நெருங்கி வரும் ரசிகனை அடியாட்களை வைத்து அப்புறப்படுத்தாமல் அவர்களுடன் சேர்ந்து நின்று சந்தோஷப்படுகிறார்.

‘எளிமை’ என்ற வார்த்தையை வெறும் வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தாமல் அதன் உண்மையான அர்த்தத்தை நிஜ வாழ்க்கையில் காண்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட கலைஞர்கள் மட்டுமே தமிழ்சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நின்றிருக்கிறார்கள்.

மாறாக தனக்கென்று ஒரு குறுகிய வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பணத்திமிருடன் போலியான முகத்தோடு வலம் வந்தவர்கள் எல்லாம் இப்போது இருக்கின்ற இடமே தெரியாமல் போய் விட்டார்கள்.

இதில் நீங்கள் எந்த ரகமாக இருக்கப் போகிறீர்கள்? முடிவு உங்கள் கையில்!

Wednesday, 19 March 2014

குரலை வைத்துதான் சசிகுமாரை அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம்...?

எப்படி டி.ஆரையும், தாடியையும் பிரிக்க முடியாதோ, அதேபோல்தான் சசிகுமாரையும், தாடியையும் பிரிக்க முடியவில்லை. கிராமத்து கதைகளாக இருந்தாலும் சரி, நகரத்து கதைகளாக இருந்தாலும் சரி, இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலுமே தாடியுடன்தான் காட்சி கொடுத்தார் சசிகுமார்.


ஆனால், இப்போது பாலாவின் பட்டறைக்குள் அவர் சென்றிருக்கிறார். விளைவு, சீயான் விக்ரம் தொடங்கி, சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா என அனைவரையும் போன்று இப்போது சசிகுமாரையும் தனது கதை பக்குவத்திற்கேற்ப அவரது தாடி, மீசையை எடுத்து விட்டு கெட்டப்பை அப்பட்டமாக மாற்றி விட்டிருக்கிறார் பாலா.


இப்படி அவரை உருமாற்றியிருக்கும் பாலா, சில டைரக்டர்களைப்போன்று என் படம் முடிகிற வரைக்கும் வெளியில் தலைகாட்டக்கூடாது என்று எந்த கண்டிசனும் போடவில்லையாம். காரணம், இப்போது இருக்கிற கோலத்துடன் சசிகுமார் வெளியில் சென்றால் அவரே சொல்லாமல் யாருக்குமே அவரை அடையாளம் தெரியாதாம்.


இதை பரிசோதனை செய்து பார்ப்பதற்காக, பொது இடத்தில் உள்ள ஒரு கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றிருக்கிறார் சசிகுமார். அங்கே இருந்த யாருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லையாம். ஆக, படத்தில்கூட சசிகுமாரின் குரலை வைத்துதான் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம். அந்த அளவுக்கு அவரை முழுசாக உருமாற்றியிருக்கிறாராம் பாலா

சினிமாவில் குடும்ப ஆதிக்கம் செலுத்தும்.... வரிசையில் இவர்கள்!

ஏற்கனவே தான் இயக்கி, இசையமைத்து நடித்த பல படங்களில் தனக்குத்தானே பின்னணியும் பாடியவர் டி.ராஜேந்தர். குறிப்பாக தங்கையை நினைத்து உருகிப்பாடும் பாடல்களென்றால் அதை கேட்கும் அத்தனை அண்ணன்மார்களையும் கரைய வைத்து விடுவார் மனிதர்.


அப்படிப்பட்ட டி.ஆர்., தனது மகன் சிம்புவுக்காகவும் அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தறியாடி -என்று ஒரு ஹிட் பாடலை பாடினார். அதையடுத்து மீண்டும் சிம்புவுக்காக, இது நம்ம ஆளு படத்திலும் தனது இளைய மகன் குறளரசனின் இசையில் இன்னொரு பாடலை பாடப்போகிறாராம் டி.ஆர்.,


குறளரசனைப்பொறுத்தவரை இது தனக்கு முதல் படம் என்பதால், எப்படியும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார்.


அதனால் படத்திற்கேற்ப மொத்த டியூன்களையும் ரெடி பண்ணி விட்ட அவர், அதில் தனது, தந்தை டி.ராஜேந்தரும், அண்ணன் சிம்புவும், பாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவர்களிடம் தனது விருப்பத்தை சொல்ல, உடனே ஓ.கே சொல்லி விட்டார்களாம்.


ஆக, தனது முதல் படத்திலேயே அப்பா, அண்ணன் என இருவரையும் பின்னணி பாட வைத்த பெருமையை பெறுகிறார் குறளரசன்.

பூமிக்கு வெளியில் உயிரினங்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!

இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக பிபிசியிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை கடந்தும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு நிரூபணம் என்று சந்திரா விக்ரமசிங்க கூறினார்.

அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம்.

ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும் அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தன என்றார் விக்ரமசிங்க.

அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு இருந்தமையால் தான் இந்த சந்தேகம் வந்திருந்தது.

ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு புதிய வரலாற்று திருப்புமுனையான தகவலையும் தந்திருப்பதாக பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி உறுதியாகியிருந்தது. வானிலிருந்து விழுந்த இந்த விண்கற்களில் இவ்வாறான உயிர்படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் உயிர் என்பது பூமியையும் தாண்டிய பேரண்ட பண்புகளைக் கொண்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது என்றார் அவர்.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுதான் இந்த விண்கற்கள் மூலம் கிடைத்துள்ள முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் அவர்களே, இந்தக் கற்கள் பூமியில் வந்து விழுந்த பின்னர் தான் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பூமியில் வந்து சேர்ந்த பின்னர் கூட அவற்றில் இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம் அல்லவா? என்று  பிபிசி வினவியது.

இந்தக் கற்கள் பூமியில் நீண்டகாலத்திற்கு இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாகப்படலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால், இங்கு நாங்கள் ஆராய்ச்சி நடத்திய கற்கள் விழுந்து சில மணிநேரங்களில் கண்டெடுக்கப்பட்டவை.


அவை வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும் சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை என்றார் பிரிட்டனின் பாக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் முன்னணி விஞ்ஞானியுமான பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க.

உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைவதாகவும் பேராசிரியர் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

இதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீட்ரோய்ட் எனப்படும் விண்கற்கள், கொமெட் எனப்படும் வால் வெள்ளிகள் அல்லது எரிநட்சத்திரங்களின் சிதைவுகள். அதாவது வால்வெள்ளிகள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவை எரிந்து விழும் சிதைவுகளே விண்கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 1/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு


சமையல் குறிப்பு விபரம்:

செய்வது: எளிது

நபர்கள்: 4

கலோரி அளவு: NA

தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)



முன்னேற்பாடுகள்:

1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.


பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம்


சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.



இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார்.



இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என யூ டியூப்பில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.



மேலும் இந்த விண்கலம் பூமியில் தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை விட மிகப் பெரியது என்றும், அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Crome Browser - மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிப்பு !!!



கணினியில் இணையதளங்களைப் பார்வையிட உதவும் கூகுள் க்ரோம் ப்ரௌசரில் மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



இதன்படி, இயங்கிக் கொண்டிருக்கும் கணினிக்கு அருகே நடக்கும் பேச்சுகள், கூட்டங்கள் ஆகியவற்றை வேறொரு கணினியின் மூலம் ஒட்டுக் கேட்க முடியும்.



இஸ்ரேலைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஒருவர் கூகுள் க்ரோமில் உள்ள இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடித்துள்ளார்.



எனினும் க்ரோமை பயன்படுத்துவோருக்கு உடனடியாக இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எந்த ஆண்ட்டி வைரஸ் சிறந்தது?


எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும் வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும்



ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.


இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது.


பாதுகாப்பு என்பது, எந்த அளவிற்க்கு இந்த புரோகிராம்கள், வைரஸ் மற்றும் மால்வேர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்தின என்ற அடிப்படையில் காணப்பட்டது. 6 மதிப்பெண் வாங்கியவை முழுமையாக இவற்றைத் தடுத்து நிறுத்தின. செயல் திறன் என்பது, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இவை இயங்கும் வேகம் குறித்தது. பயன்நிலை என்பது அவை நுகர்வோருக்கு எந்த அளவில் பயன்படுகின்றன என்ற அளவில் அறியப்பட்டது ஆகும்.


இவற்றில் Bitdefender Internet Security 2014, 18 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தைப் பெற்றது. இதே நிலையில் 18 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை Kaspersky Lab Internet Security 2014 பெற்றுள்ளது. Avira Internet Security 2014, 17.5 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. அடுத்ததாக FSecure Internet Security 2014 (16.5), BullGuard Internet Security 14.0 (15.5), Trend Micro Titanium Maximum Security 2014 (15.5), Panda Security Cloud Antivirus FREE 2.3 (15.5), AVG Antivirus Free Edition 2014 (15), Symantec Norton Internet Security 2014 (15), McAfee Internet Security 2014 (14.5), ஆகியவை இடம் பெறுகின்றன.



Bitdefender and Kaspersky ஆகிய இரண்டும் முழு மதிப்பெண்கள் பெற்று, மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாக இடம் பெற்றுள்ளன. சில பாதுகாப்பு வழங்குவதில் முழு மதிப்பெண்கள் பெற்றாலும், அவை சிஸ்டம் இயங்குவதில் சிக்கலை உண்டாக்குவதாய் அமைந்துள்ளன.



AVTest ஆய்வு நிறுவனம், வேறு சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் சோதனை செய்து, முடிவை அறிவித்துள்ளது. அவை முதல் சில இடங்களைப் பிடிக்கவில்லை; மேலும் நம்மிடையே அவ்வளவாக அறிமுகம் ஆகாதவை ஆகும். எனவே இங்கு காட்டப்படவில்லை.



இது ஒரு நிறுவனம் நடத்திய சோதனைகளின் முடிவே. பல வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதாக நம்பிக்கை கொண்டிருந்தால், அவர்கள் அவற்றுடனே தொடரலாம். அதில் சிக்கல் ஏற்படுகையில், மேலே கொடுத்துள்ள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.



ஆனால், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்தாலும், அவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமான செயல்பாடாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்:



உலகில் இப்போது இருக்கும் கரன்ஸி / கிரடிட் கார்ட் / ஆன்லைன் பேங்கிங் முறையில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மிடில்மேன் என்ப்படும் பேங்குகள் தான் பெரும் பணம் சம்பாதிக்கின்றன. அது போக சில அரசுகள் சில நேரம் அவர்களுக்கு எதிராக நடக்கும் ஆட்கள் / நிறுவனங்கள் உதாரணத்திர்க்கு விக்கிலீக்ஸ் போன்ற கம்பெனிகள் அவர்களுடைய ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்தின. இதற்க்கு காரணம் உலகின் மிக பெரிய கிரடிட் கார்ட் பார்ட்னரான விஸா மற்றூம் மாஸ்டர் கார்ட் தான் உலகத்தின் 96.5% ஆன்லைன் கிரடிட் கார்ட் வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றன. இதனால் ஆன்லைன் கரென்ஸின் ஒன்றை கொண்டு வந்தனர் பிட் காயின் மக்கள். ஒரு வேளை / அல்லது ஒரு பொருளை நீங்கள் பணம் இல்லாமல் வாங்க இந்த பிட்காயின்கள் உதவும்.


உதாரண்த்திர்க்கு உங்கள் பழைய போனை நீங்கள் பிட்காயினுக்கு விற்கலாம் / பிட் காயின் மூலம் வாங்கலாம் இப்படி ஆரம்பித்த பிட் காயின் பெரும்பாலும் பிரபலம் அடைந்தது ஃப்ரீலான்ஸர்ஸ் என்னும் சாஃப்ட்வேர் பொறியாளர்களாள் தான். இவர்கள் தான் தன் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுக்க செய்து வாங்க இந்த பிட்காயின்களை கொண்டு வந்து இப்போது சக்கை போடு போடுகிறது. இந்த பிட்காயின்களை வர்ச்சுவலாக எங்கு வேண்டுமேனாலும் செலுத்தலாம் தக்க வைத்து கொள்ளலாம் அதனால் பிரச்சினையே இல்லை இதை தொலைக்கவோ உங்கள் அக்கவுன்ட்டை ஹாக் செய்யவோ முடியாது.


இதனாலேயே இப்போது சக்கை போடும் ஒரு பிட் காயினின் தற்போதைய விலை 49,913 ருபாய்கள் ஆகும். ஸோ உங்களுக்கு ஒரு வேலை ஆன்லைனில் ஆக வேண்டும் என்றால் நீங்கள் பிட் காயின் மூலம் இந்த வேலையை செய்து கொள்லலாம். உங்களிடம் பிட்காயின் இல்லையெனில் 49,313 கொடுத்து பிட் காயின் வைத்திருப்பவர்களிடம் இருந்து நீங்களும் பிட்காயின் ஓனர் ஆகலாம். சில கல்லூரிகள் கூட தன் ஃபீஸை பிட்காயின் மூலம் உலகமெங்கும் வாங்க் அளவுக்கு ஃபேமஸ்.


தற்போது பிட்கிளவுட் வந்தால் தனி இணைய வழி அதாவது கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் மூலம் உங்கள் வேலைளை நடத்த முடியும், ஒட்டு கேட்டல் , உளவு பார்த்தல், களவு செய்தல், ஹேக் செய்தல் நடக்காது. உங்களுக்கு தேவையான தகவல் சர்வருக்கு நேராய் அல்லது கணணியுடன் தன் நெட்வொர்க்கை கிரியேட் செய்ய இந்த பிட்கிளவுட் டெக்னாலஜி உதவும். எனக்கு அப்டேட் வரும்போது உங்களுக்கு தகவல் தருகிறேன்

ஆப்பிளின் ஐ வாட்ச் - அதிக சிறப்புகள் இங்கே..!

இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது ஆப்பிளினி ஐ வாட்ச்சை பற்றி தான் இதுகுறித்து ஆப்பிள் ஒரு சிறு தகவலை கூட ஆப்பிள் வெளியிடாமவ் ரகசியம் காத்து வருகின்றது.

அந்த அளவுக்கு இதில் பல புதிய தொழில் நுட்பங்கல் வர இருக்கின்றது என்னவோ உறுதி, தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய சோனியின் ஸ்மார்ட் வாட்ச்சை விட பல அதிக சிறப்பு வசதிகளுடன் இது வெளிவர இருக்கின்றது என கூறுகின்றனர்.

இதில் புளுடூத் உள்ளது இதன் மூலம் இந்த வாட்ச்சை உங்களது ஐ போனில் நீங்கள் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் வாட்சுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இதில் இதன் திரையும் மிகப் பெரியது ஆகும் அதோடு இதில் எனர்ஜி பேன்டும் இதிலேயே இருக்கும்.

அதாவது இதன் முலம் உங்களது உடலின் வெப்பநிலை இரத்த அழுத்தம் ஆகியவற்றை இந்த வாட்ச் மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடும்.

மேலும் இதிலேயே பேஸ்புக். டவிட்டர் ஆகியவற்றை நாம் பார்த்து கொள்ளலாம் இதை உங்கள் ஐ போனுடன் கனெக்ட் செய்தால் உங்களுது மொபைலுக்கு வரும் கால், மெசேஜ் அனைத்தையும் இதில் காணலாம்.

 இதில் ஒரு சிறிய கேமராவையும் வைத்திருக்கிறது ஆப்பிள். வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பை ஆப்பிள் வெளிவிடும் எனத் தெரிகிறது இதோ அந்த ஐ வாட்ச்சின் படங்களை பாருங்கள்.

துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க சில ஈஸியான வழிகள்!

கார் அல்லது இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விருப்பமான துணிகளில் கிரீஸ் கறை படிந்துவிட்டதா? அத்தகைய கறைகளைப் போக்குவது கஷ்டம் என்று நினைத்து, விருப்பமான அந்த துணியை தூக்கி எறிவதோ அல்லது வீட்டைத் துடைக்கவோ பயன்படுத்துகிறவர்களா?

அப்படி உடுத்தும் துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது அதனை தூக்கிப் போட நினைக்காமல், அதனை எப்படி ஈஸியாக நீக்குவது என்று யோசிக்க வேண்டும். அதிலும் கறை படிந்த உடனேயே எதனைக் கொண்டு அலசினால், உடனே கிரீஸ் கறை நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துணிகளில் கிரீஸ் படிந்து நன்கு உலர்ந்துவிட்டால், பின் அந்த கறையைப் போக்குவது கடினம்.

எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை கறை படிந்த உடனேயே செய்தால், நிச்சயம் கிரீஸ் கறையானது விரைவில் நீங்கிவிடும். சரி, இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம்.
       
டால்கம் பவுடர்

துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், அப்போது நீரைக் கொண்டு தேய்த்தால், கறை தான் பரவும். ஆனால் அந்நேரம் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்தால், கறையானது போய்விடும்.

உப்பு

மற்றொரு சிறப்பான வழியென்றால் அது உப்பு தான். அதற்கு 1 பகுதி உப்பில் 4 பகுதி ஆல்கஹால் சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது கவனமாக தேய்க்கவும். இல்லாவிட்டால், துணியின் ஃபேப்ரிக் பாழாகிவிடும்.

பேக்கிங் சோடா


பேக்கிங் சோடா கூட ஒரு சூப்பரான கிரீஸ் கறையை நீக்க உதவும் பொருள். அதிலும் அந்த பேக்கிங் சோடாவை கறை படிந்த இடத்தில் தூவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், கிரீஸ் கறையானது ஈஸியாக நீக்கிவிடும்.

வினிகர்

எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையும் நல்ல தீர்வைத் தரும். அதற்கு இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தெளித்து 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு தேய்த்தால் கறை மங்க ஆரம்பிக்கும். இல்லாவிட்டால் வினிகர் மற்றும் உப்பு கலந்து, அதனை கறை உள்ள இடத்தில் பயன்படுத்தினாலும், கறை போய்விடும்.

கார்ன் ஸ்டார்ச்

டால்கம் பவுடரைப் போன்றே கார்ன் ஸ்டார்ச்சும் கிரீஸ் கறையைப் போக்க உதவும். ஆகவே அந்த கார்ன் ஸ்டார்ச்சை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் டிடர்ஜெண்ட் சோப்பு பயன்படுத்தி துவைத்தால், கறை எளிதில் நீங்கிவிடும்.

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்…

முட்டை மற்றும் க்ரீம் மாஸ்க்:

முட்டையில் உள்ள பயோடின், புரதச்சத்து, மற்றும் வைட்டமின்கள் தோலை இறுகச் செய்து சுருக்கங்களை தடுக்க வல்லவையாகும். முட்டை கருவில் வயதாகுவதை தடுக்கும் சக்தியுள்ளது. இதன் க்ரீம் தோலை மென்மையாகவும் பொலிவாகவும் தோன்றச் செய்யும். ஒரு முட்டையுடன் அரை கோப்பை க்ரீம் எடுத்து கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களை காண முடியும்.

வாழைப்பழம் மற்றும் கேரட் மாஸ்க்:

இந்த இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இவை மிகுந்த அற்புதங்களை செய்யும் பழங்களாகும். தோலை திடப்படுத்தவும் சுருக்கங்களை குறைக்கவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இவ்விரண்டு பழங்களிலும் உள்ளன. தலா ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு கேரட் வைத்து இவற்றின் பசையை தயாரித்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்:


சருமத்தில் நிறைய அழுக்குகள் மற்றும் கழிவுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவையும் சுருக்கங்களை உருவாக்கக் கூடும். தூங்கப் போகும் முன் ரோஸ் வாட்டரால் முகத்தை சுத்தம் செய்வது அழுக்குகளை நீக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள், வீக்கங்களை குறைத்து புதிய சருமத்தை உருவாக்கும். ஒரு பஞ்சு உருண்டை கொண்டு ரோஸ் வாட்டரில் நனைத்து, வட்ட வடிவில் முகத்தில் தடவ வேண்டும். இத்தகைய வட்ட அழுத்தங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் மிகச்சிறந்த ப்ளீச் செய்யும் சக்தியும், வயதை குறைவாகக் காட்டும் சக்தியும் உண்டு. தினமும் ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பையும், சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் நீக்க முடியும். உருளைக்கிழங்கை மாஸ்க் ஆகவும் பயன்படுத்த முடியும். ஒரு கிழங்கை மசித்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு முகத்தில் போட்டதும் 5-10 நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண முடியும்.

தயிர் மாஸ்க்:


தயிரில் உள்ள வைட்டமின்கள் திசுக்களை சரி செய்து அதை மீண்டும் கட்டி எழுப்பும். தயிரை தினமும் உண்பதும் சருமத்திற்கு மிகுந்த நன்மையை தரும். தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவினால் அது முகத்திற்கு பொலிவூட்டி சுருக்கங்களை குறைக்கின்றது. இதை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும். இத்தகைய வீட்டிலேயே செய்யக் கூடிய அழகு சாதன பொருட்களை கொண்டு செய்யப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தி அழகான மாற்றத்தை காணுங்கள்!

அழுத்தமில்லாத மனசு…

உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.
பசியை விற்று உணவு வாங்கினேன்.


என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.

இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி அவை நம் வீடு வரை பயணித்து விடுகின்றன.

மன அழுத்தத்தை அகற்றி மகிழ்ச்சி காண இதோ சில சக்ஸஸ் டிப்ஸ்:

1. எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தன் கருத்துக்களை பரிமாற இன்று பெரிதும் பயன்படுத்தும் கருவி தொலைபேசி. தொலைபேசியை எடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரின் எண்ணை அழுத்துகையிலேயே உங்கள் அழுத்தங்களை தளர்த்திக் கொள்ளும் விதமாக, நீளமாக மூச்சை உள்ளிழுத்து மூன்று முறை வெளியேற்றலாம். இது உங்கள் நுரையீரல் அழுத்தத்தைக் குறைக்கும்.

2. இன்று நாகரீகம் வளர்ந்த சூழ்நிலையில் நின்று செய்ய வேண்டிய வேலையை உட்கார்ந்தும் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையை நின்று கொண்டும், நடந்து கொண்டும் செய்கிறார்கள். பெரும்பாலும் உணவு உட்கொள்கிற போது உட்கார்ந்து உணவை அருந்தலாம். மகிழ்ச்சியான சூழ்நிலையில் நிதானமாக உணவருந்துதலும் மனதிற்கு மாற்றத்தையும் ஓய்வையும் அளிக்கும்.

3. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அல்லது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் போதும் பலர் ஓடுகிற வாகனத்துக்குள்ளேயே மனத்தளவில் பதட்டமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். வண்டி இன்னும் வேகமாகப் போகுமென்று முன்சீட்டைத் தள்ளுபவர்களும் உண்டு. ஏனிந்த பதட்டம்? பயணங்களின் போது, நல்ல இசையைக் கேட்கலாம். அல்லது உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய உரைகளைக் கேட்டு ரசிக்கலாம். மனதிற்கு நிறைவான புத்தகங்களை வாசிக்கலாம்.

4. உங்கள் பரபரப்பான வேலை நாட்களிலும் ஒரு சில நிமிடங்களை கடவுளுக்கு நன்றி செலுத்த செலவிடுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவராக இருந்தால் நீங்கள் நம்பும் எதுவாக இருந்தாலும் அவற்றிற்காக சில நிமிடங்கள் நன்றி செலுத்துங்கள்.

5. மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மோதல். அந்த நாளில் உங்களை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் ஒரு நிமிடம் உங்கள் மனதை தளர்த்திக் கொண்டு, ஆழமாக மூச்சையிழுத்து பின் உங்கள் மனம் முழுவதும் அவர்களுக்கான மன்னிப்பை நிரப்பி விடுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணுங்கள்.

6. இன்று உங்கள் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளையும் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இந்த நாள் இணையற்ற நாளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பை அதிகப்படுத்துங்கள்.

7. நீங்கள் தோற்றுப்போனதாக நினைக்கிற தருணங்களில் நீங்கள் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திடுங்கள்.

8. உங்களை நீங்களே விரும்பப்படுகிற போதுதான் மற்றவர்களால் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

9. கடந்து விட்ட கடந்த காலத்தை கணக்கில் கொள்ளாமல், நிகழும் காலத்தில் நீங்கள் உருவாக்குகிற மகிழ்ச்சிதான் உங்கள் எதிர்காலம் என்பதை அறிந்து செயல்படுங்கள்.

10. உங்களிடமுள்ள ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் தினசரி கொடுக்கலாம். அது உங்கள் நேரமாகவோ, உங்கள் உழைப்பாகவோ உங்கள் அன்பாகவோ, உங்கள் நம்பிக்கையாகவோ கூட இருக்கலாம்.

அழுத்தம், பயம், சந்தேகம் என இன்னும் பல தடைகளை தகர்த்தெறியும் சில உத்திகள்தான் இவை. உங்கள் வெற்றிக்கதவுகளை திறக்கும் மந்திர சாவி உங்கள் மனமன்றி வேறில்லை!!