Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 12 February 2014

உலக அளவில் கொண்டு செல்லப்போகும் - விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே முன்னணி நாயகர்களின் ஒருவராக உருப்பெற்றவர் நடிகர் . இவர் கைவசம் தற்போது ‘வசந்த குமாரான்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்கள் உள்ளன. இந்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார்.

தனது தயாரிப்பில் ‘சங்கு தேவன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால், ஒருசில காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பதிலிருந்து விலகிவிட்டார். தற்போது ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரிக்கிறாராம். இதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளாராம்.

இப்படத்தை பிரபல இயக்குனர் பிஜூ விஸ்வநாத் இயக்கவிருக்கிறார். இவர், ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஸ்பானிஷ், ஜப்பான் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கி, பல விருதுகளை வாங்கிக் குவித்தவர். இவருடன் கைகோர்த்திருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்தை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment