Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 12 February 2014

இரட்டை வேடம் விஜய்க்கு கைக்கொடுக்குமா...?

‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்காக விஜய் வில்லனை விரட்டிப் பிடிக்கும் காட்சியை ஒருநாள் இரவு முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதை வெளியாகியுள்ளது. கதைப்படி இப்படத்தில் வில்லனாக வருபவர் இண்டர்நேஷனல் தாதாவாம். இந்த கதாபாத்திரத்தில் பெங்காலி நடிகர் டோடா ராய் சௌத்ரி நடிக்கிறாராம்.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் தாதாவை பிடிக்க உள்ளூர் போலீஸ், துப்பறியும் நிறுவனம் நடத்தும் விஜய்யின் உதவியை நாடுகிறது. அவர் தன்னுடைய துப்பறியும் மூளையை வைத்து அந்த வில்லனை பிடித்து விடுகிறார். தன்னை பிடித்துக் கொடுத்த விஜய்யை பழிவாங்க துடிக்கும் தாதா ஜெயிலில் தப்பித்து வெளியே வருகிறார். விஜய்யை கொலை செய்ய தேடும்போது  விஜய்யை போலவே இன்னொருவர் இருக்கிறார் என்பது தெரிகிறது. இதன்பிறகு என்ன ஆகிறது என்பதை ஆக்‌ஷன் கலந்து பல்வேறு திருப்பங்களுடன் சொல்கிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் நடைபெற இருக்கிறது. ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை ராஜமுந்திரியில் படமாக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment