Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 12 February 2014

‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ வரிசையில் இந்தப் படம் - ரஜினிகாந்த் பாராட்டு!

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா’. ‘பசங்க’ படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து தயாரிப்பாளரான லிங்குசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லிங்குசாமியை நேரில் அழைத்த ரஜினி அவரிடம், நல்லப்படத்தை தயாரித்ததற்காக வாழ்த்துகிறேன். மேலும் இப்படத்தை கோயம்பேட்டில் எப்படி படமாக்கினார்கள் என்பது என்னை ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக சிறுவர்கள் நடிப்பு அருமையாக இருந்தது. இவர்களை வைத்து சிறப்பாக இயக்கிய விஜய் மில்டனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த படத்தையும் அவர் சிறப்பாக எடுக்க எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இவர்களுடைய சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்த ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ ஆகிய படங்கள் வெளியானபோதும் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு வாழ்த்து கூறினார். அந்த வரிசையில் ‘கோலி சோடா’ படமும் இணைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் வாழ்த்து தெரிவித்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று லிங்குசாமி கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment