பொதுவாக கமல் படம் வெளியான பிறகுதான் அது அந்தப் படத்தோட காப்பி, இல்லை இந்தப் படத்தோட தழுவல் என்று கச்சேரி களைகட்டும். உத்தம வில்லனில் போஸ்டரிலேயே தொடங்கியது குடுமிப்பிடி.
மலபாருக்கு வந்த பிரெஞ்சு போட்டோகிராஃபர் தெய்யம் கலைஞரை எடுத்த புகைப்படத்தை கமல் காப்பியடித்துவிட்டார் என்று இணையம் அலறியது. மீடியா வழிமொழிந்தது. வழக்கம் போல இதற்கும் கமல் சைலண்ட்.
தமிழகத்தை தாண்டினால்தான் கமலுக்கு மனத்தடை விலகும். இப்போதும் அப்படியே. மும்பையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் தந்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கலை தெய்யம். அந்த முகவண்ணத்தை வரைந்தது மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு கலைஞர்.
தெய்யம் கலை, தமிழின் கூத்து இரண்டும் கலந்த பியூசன் படத்தில் உள்ளதால் அந்த மேக்கப்பை தேர்வு செய்தாராம் கமல்.
இணையத்தில் பலரும் எழுதியது போல் அது மாஸ்க் கிடையாதாம். அது கமலின் ஃபேஸ். கமலின் முகத்தில் தெய்யம் கலைஞரின் முகவண்ணத்தை வரைய நான்கு மணிநேரங்களானதாம்.
தமிழ்நாட்டிலேயே இப்படியொரு விளக்கத்தை தந்திருக்கலாமே.
0 comments:
Post a Comment