Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 13 March 2014

அட, இது நல்ல ஐடியாவா இருக்கே...?


படம் பார்க்க தியேட்டருக்கு யாருமே வர்றதில்லை. முதல் ஷோ-வுக்கே மூணு பேர்தான் வர்றாங்க. அவங்களுக்காக படத்தை ஓட்ட முடியுமா?


தமிழ்நாட்டில் பரவலாக கேட்கிற சோகக்குரல்தான் இது. முன்னணி நடிகர்களின் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்கள் மூன்று நாளை தாண்டவே முக்குகிறது. இது ஒருபுறம் என்றால்,



அவுட்டோர் போகவே முடியலைங்க. ஸ்டார்ஸை பார்க்க ஆயிரக்கணக்கில் வண்டி கட்டிட்டு வந்திடுறாங்க என்ற புலம்பல் இன்னொரு பக்கம். கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படப்பிடிப்பிலும் அதுதான் நடந்தது.


இந்தப் படத்தில் ரயிலும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. நிறைய காட்சிகள் ரயிலில்தான். இதற்காக மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருந்தனர்.


பாடல் காட்சியை படமாக்கையில் ப்ரியா ஆனந்தையும், விமல், சூரியையும் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டனர். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் லாரியில் வந்தவர்கள் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் இருப்பார்கள் என்றார் கண்ணன் (கட்சி மாநாட்டுக்கே இப்போ அவ்வளவு பேர் கூடுறதில்லையே).


ஒன்றரை லட்சம் பேர் கூடி கூச்சலிடும் போது எப்படி படப்பிடிப்பை நடத்த முடியும்? விமல், ப்ரியா ஆனந்த், சூரி மூவரையும் கேரவனுக்குள் அனுப்பியும் கூட்டம் கலையவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த கூச்சல் குழப்பத்துக்கு நடுவில் படப்பிடிப்பை நடத்தினாராம் கண்ணன்.



சரி, செய்தியின் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறதே. ப்ரியா ஆனந்தை திரையில் பார்க்கதான் வரமாட்டேங்கிறாங்க. பேசாம ஷுட்டிங் ஸ்பாட்டில் அவரை பார்க்க டிக்கெட் வசூலித்தால் பிலிமும் மிச்சம் காசும் மிச்சம்.


ஒன்றரை லட்சம் பேருக்கு தலைக்கு பத்து ரூபாய் வைத்தாலும் பதினைந்து லட்சங்கள் வருகிறதே. மயிலாடுதுறைக்கு இது அதிகமில்லையா.


0 comments:

Post a Comment