ஏப்ரல் மாதம் ஸ்டார் வார் ஸ்டார்ட் ஆகிறது. இந்த வார் நடப்பது இரண்டு காமெடியன்களுக்கு நடுவில். ஒருவர் கவுண்டமணி, இன்னொருவர் வடிவேலு.
அரசியல் வனவாசம் சென்ற வடிவேலு ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்துடன் ரீஎன்ட்ரியாகிறார். வயோதிகத்தால் வனவாசம் சென்ற கவுண்டரின் ரீஎன்ட்ரி படம் 49ஓ. கவுண்டர் விவசாயியாக நடித்திருக்கும் இதுஒரு அரசியல் நையாண்டி படம்.
இரண்டு படங்களும் இறுதிகட்டத்தில் உள்ளன. இரண்டின் தயாரிப்பாளர்களும் படத்தை ஏப்ரலில் வெளியிடும் திட்டத்தில் உள்ளனர். கவுண்டமணியின் வசவுகளையும், உதைகளையும் வாங்கி வளர்ந்தவர் வடிவேலு.
அவையெல்லாம் அவரிடத்தில் ஆறாத வடுக்களாக உள்ளன. சிங்காரவேலன் படத்தில் கவுண்டர் விட்ட எத்துகளை தனி காமெடியன் ஆனபிறகும் வேதனையோடு பகிர்ந்திருக்கிறார் வடிவேலு.
யார் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பது இருவருக்குமே இமேஜ் பிரச்சனை.
கவுண்டரா, வடிவேலா?
யார் ஜெயித்தாலும் ஏப்ரலில் என்டர்டெய்ன்மெண்டுக்கு பஞ்சமிருக்காது.
0 comments:
Post a Comment