Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 February 2014

தொப்பை குறைய 5 பயிற்சிகள் !

 தொப்பை குறைய 5 பயிற்சிகள் :

கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்..

வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத்தல்
அழகான உருவமைப்பிற்கு வெகு முக்கியமானது..

தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் அவசியம் ... வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவதால் ஏற்படும் தொந்தியை வயிற்று தசைகளுக்கான பிரத்யேகமான பயிற்சிகளால் மட்டுமே சரி செய்யவியலும்....
அவை

பயிற்சி -1 முதலில் வார்ம் அப் பயிற்சியும் அதை தொடர்ந்து ஸ்டெரச் பயிற்சியும் செய்த பின் மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும் முதலில் வயிற்றை உள் இழுத்து கொண்டு மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளி விட வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்தல் வேண்டும்

பயிற்சி - 2 நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைத்து கொள்ள வேண்டும் பின் பக்கவாட்டு புறமாக காலை மட்டும் கொண்டு செல்லவேண்டும் வலது புறமும் இடது புறமுமாக மாற்றி மாற்றி செய்ய வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்து விட்டு இருபது நொடிகள் ஓய்வு தரவேண்டும் பின் மீண்டும் ஒருமுறை வலது புறமாகவும் இடது புறமாகவும் காலை கொண்டு செல்லவேண்டும் இதை ஹிப்ரோல் என்று கூறுவர் இதன் மூலம் வயிற்றில் உள்ள கொழுப்பு கரையும்

பயிற்சி - 3 நேராக நின்று கொண்டு ஒரு காலை மட்டும் மடக்கி மெதுவாக சுழற்ற வேண்டும் 30 முதல் 45 நொடிகள் சுழற்றிவிட்டு பின் காலை மாற்றி சுழற்றல் அவசியம்...இதன் மூலம் இடுப்பில் உள்ள தசைகள் வலுவடையும் தேவையற்ற கொழுப்புகள் கரையும்

பயிற்சி - 4 நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி சற்று விரித்து வைத்துக் கொண்டு கைகளை முட்டியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் .. பத்து முறை இவ்வாறு செய்துவிட்டு 20 நொடி ஓய்வு பின் மீண்டும் ஒரு செட் என பயிற்சியை தொடரவும் ...

பயிற்சி - 5 உட்கார்ந்து கொண்டு கைகளை பக்கவாட்டில் இருத்திக்கொள்ள வேண்டும் ...கால்களை மட்டும் முன் கொண்டு செல்ல வேண்டும் பின்பு பின் இழுத்துக்கொள்ள வேண்டும்...இது போல 6 முதல் 10 முறை செய்து விட்டு 20 நொடிகள் ஓய்வு கொள்ள வேண்டும் பின் ஒரு செட் என பயிற்சி செய்ய வேண்டும் ....

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பயிற்சிகளுக்கும் ஒரு செட்க்கும் அடுத்த செட்க்கும் இடையில் ஓய்வு கண்டிப்பாக தேவை இது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான பயிற்சிகள் மட்டுமே.

0 comments:

Post a Comment