Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 February 2014

பிரபலங்களின் வாழ்க்கையில் காதல்..

பிப்ரவரி 14 – காதலர் தினம். உலகம் முழுவதும் இளம் காதலர்களால் மிகவும் குதூகலமாகக் கொண்டாடப்படும் நாள். காதல் என்பது பலரது வாழ்க்கையை பிரகாசமாக்கியிருக்கும். சிலரது வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கும்.

சரி சில மூத்த காவியக் காதலர்களை இங்கு நினைவு கூருவோம் :

ஜான்சனின் காதல்

ஆங்கில அகராதியை தயாரித்து அளித்தவர் சாமுவேல் ஜான்சன். அவர் தன் இருபத்தைந்து வயதில் நாற்பத்தாறு வயது நிரம்பிய விதவைப் பெண்ணான டெட்டி போர்ட்டர் என்பவரைப் காதலித்து மணந்துகொண்டார்.

தாந்தேயின் காதல்

புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாந்தே. தனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தன் வயதையொத்த பேட்ரிக் என்ற சிறுமியிடம் மனதைப் பறிகொடுத்தார்(!). ஆனால் துரதிர்ஷ்டவசமாக பன்னிரெண்டு வயதில் அந்தச் சிறுமி இறந்து போய்விட காலமெல்லாம் அந்தப் பெண்ணை நினைத்து காதல் கவிதைகளை வடித்தார்.

நெப்போலியனும் ஜோசப்பைனும்

மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார் நெப்போலியன். திருமணம் முடிந்து முப்பந்தைந்து மணி நேரம் மட்டுமே மனைவியுடன் இருந்துவிட்டு போர் முனைக்குச் சென்றுவிட்டார் நெப்போலியன். போர் முனையிலிருந்து நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஐயாயிரம்.

காரல் மார்க்ஸ்-ஜென்னி

கம்யூனிச சித்தாந்தத்தின் தந்தை காரல் மார்க்ஸ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஆனால் அவரது காதலி ஜென்னி, பிரபுக்கள் வம்சத்தவர். தன் காதல் கணவருக்காக தன் சுகங்களை எல்லாம் துறந்து வறுமையில் வாடினார் ஜென்னி. தன் கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன்னைத் தியாகம் செய்தார். ஜென்னியை போன்ற பெண் மனைவியாய் கிடைப்பது காலத்தின் கொடை என்றுதான் கூற வேண்டும்.

காதல் மலர்!

இத்தாலியில் வாழ்ந்த ரோபக்டோ என்பவர் அலெக்ஸாண்ரா என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போகும் நேரம் அலெக்ஸாண்ட்ராவுக்கு ரோபக்டோ மீது திடீரென்று கோபம் ஏற்பட நிச்சயதார்த்தம் நின்றது. அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு நாள் கூடத் தவறாமல் ரோஜா மலரை 1,480 நாட்களுக்கு அனுப்பினார் ரோபக்டோ.

அப்படியிருந்தும் கோபம் தணியவில்லை. ரோபக்டோ இத்தாலியின் பிரதான நகரமான கின்னெட் வால்நகரின் மையப் பகுதியில் தனது காதலிக்காக 80 அடி அளவில், இதய வடிவிலான காதல் சிற்பத்தை பளிங்கு கற்களால் அமைத்தார். 200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சிற்பம் எழுப்பப்பட்டது.

0 comments:

Post a Comment