Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 14 March 2014

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சென்டிமென்ட வைப்பீங்க பாஸ்ஸ்....?

வெங்கட்பிரபு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக எடுத்த படம்தான் சென்னை 28. அது அவரது முதல் படம் என்பதோடு, ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜயலட்சுமி என முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுத்தார்.


ஆனால் படம் வெளியாகி தாறுமாறாக ஓடி, அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது.


அதையடுத்து வெங்கட்பிரபு உள்பட அப்படத்தில் நடித்த அனைவருமே வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாகி விட்டனர். இந்த நிலையில், தற்போது கிரிக்கெட்டை மயமாக வைத்து ஆடாம ஜெயிச்சோமடா என்றொரு படத்தை இயக்குகிறார் பத்ரி.


அப்படத்தில் நடிப்பதற்கும் சென்னை 28ல் நடித்த சிவாவையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதோடு, சிவாவும் ஒரு கிரிக்கெட் பிளேயர் என்பதால் அப்படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்திருக்கிறார் பத்ரி.


மேலும், இப்படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தவர்கள், அதே சென்னை 28 படத்தில் அறிமுகமான விஜயலட்சுமியையே புக் பண்ணியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சரியான படமே இல்லாமல் ஓய்ந்திருந்த நேரத்தில் இந்த படவாய்ப்பு கிடைத்திருப்பதால் உற்சாகம் பீறிட களத்தில் இறங்கி விட்டார் விஜயலட்சுமி.


 அதோடு, நான் அறிமுகமான முதல் படத்திலும் கிரிக்கெட், இந்த படத்திலும் கிரிக்கெட், ஆக கிரிக்கெட் செண்டிமென்ட் மீண்டும் எனக்கு ஒரு பெரிய ஹிட்டை கொடுக்கப்போகிறது என்கிறார் விஜயலட்சுமி.

0 comments:

Post a Comment