உலக அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் முறையில் அவதார் படத்தை எடுத்து சாதனை நிகழ்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். 237 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டது.
ஆனால், 3000 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது இப்படம். இப்படம் உருவான மோஷன் கேப்சர் டெக்னாலஜியை தழுவித்தான் ரஜினி நடித்துள்ள கோச்சடையானும் உருவாகியிருக்கிறது.
ஆனால் 125 கோடி பட்ஜெட்டில் 2 வருடங்களில் படத்தை முடித்துள்ளார்கள். இப்படியொரு படம் இந்தியாவில் உருவாகியிருக்கிற விசயம் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரிந்ததையடுத்து, கோச்சடையான் படத்தை தான் பார்க்க வேண்டும் என்று படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளாராம் அவர்.
அதைத் தொடர்ந்து, தற்போது படத்தை ஏப்ரலில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையிலும், விரைவில் ஜேம்ஸ் கேமரூனுக்கு கோச்சடையானை திரையிட்டு காண்பிக்கவும் முடிவு செய்திருக்கிறார் செளந்தர்யா.
0 comments:
Post a Comment