Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, 13 February 2014

மறுபடியும் களத்தில் கோலிசோடா டீம்.. புதுதகவல்!

ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் 6 வருடங்களுக்கு முன்பு அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று ஒரு படம் இயக்கினார். அது வெற்றிகரகமாக அமையவில்லை. அதன்பிறகு படம் இயக்குவதை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றினார். என்றாலும் இயக்குனராக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்கிற லட்சியத்தோடு கோலிசோடா கதையை உருவாக்கினார். கதையை கேட்ட யாரும் தயாரிக்க முன்வரவில்லை. வேறு வழியில்லாமல் தனது சொத்து ஒன்றை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் கோலிசோடாவை எடுத்தார்.

சுமார் ஒரு வருடம் இதன் படப்பிடிப்பு கோயம்பேடு மார்க்கெட்டிலேயே நடந்தது. படம் முடிந்ததும் அதனைப் பார்த்த இயக்குனர் லிங்குசாமி தனது திருப்தி பிரதர்சுக்காக வாங்கினார்.

சுமார் 70 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படத்தை லிங்குசாமி ஒன்றரை கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. படம் இப்போது 8 கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. இதில் தயாரிப்பாளர் பங்காக 5 கோடி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 15 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள்.

இதனால் உற்சாகத்தில் இருக்கும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விஜய் மில்டனின் கோலிசோடா டீமின் அடுத்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை விஜய் மில்டன் துவங்கி விட்டார். இசை அமைப்பாளர் உள்ளிட்ட டெக்னிக்கல் டீம் அப்படியே அடுத்த படத்திலும் இருக்கிறது. தற்போது பாப்புலராக இருக்கும் ஹீரோவும் முன்னணி ஹீரோயினும் நடிக்க இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment