Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 5 March 2014

தாய்க்கு பெண்குழந்தை தான் சிறந்த தோழி!

ஒரு பெண் எப்பொழுது முழுமையடைகிறாள் என்றால், அவள் தன் குழந்தைக்குத் தாயாகும் பொழுது தான். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண்ணாக இருந்தாலும், எவ்வித நெருடலுமின்றி வாரி அணைத்துக் கொள்பவள் தான் தாய்.

அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்தி, அல்லும் பகலும் வளர்ப்பாள். தன்னுடல் நோக தன்னை வருத்தி, கண் விழித்து, தன் சுக துக்கம் பாராமல், தன் குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய்க்கு, பிறந்தது ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

பெண் குழந்தை என்பது ஒரு தாய்க்குக் கூடுதல் சாதகமான விஷயம். குழந்தையே அவளுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள். ஒரு தாய்க்கு ஆண்குழந்தையை விட பெண்குழந்தையிடம் தான், ஒரு தோழியாகவும் இருக்க முடியும்.

இப்போது பெண் குழந்தையைப் பெற்ற ஒரு அன்னையானவள் அடையும் நன்மைகளை பார்க்கலாம்.. மகள் இருந்தால் மகளையே தோழியாக்கிக் கொண்டு, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். கணவரோ, மகனோ பெண்களின் பேச்சுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் போகலாம்.

ஆனால் மகள் இருந்தாள் தாயின் உணர்வுகளையும், பேச்சையும் காது கொடுத்துக் கேட்பாள். தையல், சமையல், அலங்காரம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால், மகளுக்கும் ஆர்வம் இருக்கக்கூடும் அல்லது இவற்றைக் கற்றுக் கொடுக்கலாம்.

அப்பொழுது தான் இருவரும் அவற்றைப் பற்றி விவாதித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். இருவரும் சேர்ந்து செய்து போது இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருக்கும். பெண் குழந்தையின் மகத்துவம் ஷாப்பிங் செய்யும் போது தெரியும். பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் செய்யும் போது விலகியே இருப்பார்கள்.

ஷாப்பிங் செய்வது பெண்களின் வேலை என்று சொல்வார்கள். ஷாப்பிங் செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதை மகளுக்கும் கற்றுக் கொடுங்கள். உங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வாள். பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடைகள், பொருட்களை முகம் சுழிக்காமல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள்.

ஆடைகளிலும், அலங்காரப் பொருள்களிலும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள நவீன ஃபேஷன்கள் குறித்து விவாதித்துத் தெரிந்து கொள்ளலாம். லேட்டஸ்ட்டாக வந்துள்ள டிசைன்கள் மற்றுன் ஃபேஷன்கள் குறித்து, இன்றைய தேதி வரையிலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக வாங்கியுள்ள ஆடைகள் உங்களுக்கு எப்படி இருக்கின்றன, கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உடலுக்கு நன்றாக இருக்கும் எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment