Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 2 March 2014

பழிவாங்குவது பெண் ஆவிதானா?

‘அவன் இவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த மதுஷாலினி நடிக்கும் புதியபடம் ‘கல்பனா ஹவுஸ்’. இப்படத்தில் வேணு, கார்த்திக், திரில்லர் மஞ்சு, மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனர் குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். லியாண்டர் இசையமைக்கிறார். ஜி.பார்த்திபன் ஒளிப்பதிவை செய்து வருகிறார்.


‘கல்பனா ஹவுஸ்’ படம் ஏற்கனவே கன்னடம், தெலுங்கில் எடுக்கப்பட்டு வெற்றிப் பெற்றுள்ளது. அதே படத்தை தமிழிலும் அதே கலைஞர்களை கொண்டு உருவாக்கி வருகிறார்கள். படத்தின் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக பாடல்கள் இல்லாத படமாக தயாரித்து வருகிறார்கள்.


பிரபல என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குகிறார். அங்கு திடுக்கிடும் பல சம்பவங்கள் நடந்து அவர்களை பயமுறுத்துகின்றன. தங்கியிருப்பவர்களில் ஒவ்வொருவராக பழி வாங்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.


இதற்கு காரணம் காட்டு பங்களாவில் இறந்து போன பெண் ஆவியாக வந்து பழிவாங்குகிறாள் என்று கூறுகிறார்கள். இதைக்கண்டு பிடிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது பழிவாங்குவது பெண் ஆவிதானா? என்பதை மைசூர் காட்டுக்குள் திகிலூட்டும் பேய் படமாக உருவாக்கி வருகிறார்கள். 

0 comments:

Post a Comment