Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 2 March 2014

இந்த நடிகைக்கு இதே வேலையா போச்சு!

நடிகை காஜல் அகர்வாலையும், தொழில் அதிபர் ஒருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் துபாயில் ஜோடியாக சுற்றுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் உள்ளூரில் பொது இடங்களில் சந்திப்பதை தவிர்த்து வந்த அவர்கள் துபாயில் ஜாலியாக சுற்றி திரிந்தபோது யாரோ இந்த படங்களை எடுத்து இணையதளங்களில் பரவவிட்டதாகவும் கூறப்பட்டது.


காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவுக்கு திருமணம் முடிந்துள்ளது. அடுத்து காஜல் அகர்வால் திருமணம் விரைவில் நடக்கும் என்றும் பேசப்பட்டது. காஜல் அகர்வாலுடன் சுற்றிய தொழில் அதிபர் விவரம் பற்றி தெரியவில்லை. அவர் மும்பையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றனர்.


இதுகுறித்து காஜல் அகர்வாலின் தங்கை நிஷா கூறும்போது, ‘‘காஜலுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நிறைய பேருடன் இணைந்து அவர் போட்டோ எடுத்துள்ளார். அதுபோல்தான் இன்டர்நெட்டில் வந்த படத்தில் இருப்பவருடனும் சேர்ந்து போஸ் கொடுத்து இருப்பார். இதை பெரிதாக்குகிறார்கள்’’ என்றார்.


தற்போது காஜல் அகர்வாலும் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் யாரையும் காதலிக்கவில்லை. என் திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன். நிறைய படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் உழைப்பு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. என் திருமணம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்தே நடக்கும் இப்போது இல்லை என்று அதில் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment