பல் மருத்துவத்தில் பற்களை பொருத்துவது ("இம்பிளாண்ட்') பிரபலமாகி வருகிறது.
மேல் தாடையிலோ கீழ் தாடையிலோ அனைத்து பற்களும் இல்லாதவர்களுக்கு மேல் அண்ணம் முழுவதும் அக்ரிஸிக் பிளேட் மூலம் மூடி பற்களைப் பொருத்தலாம். ஆனால், சிலருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும்.
அதே போன்று கழற்றி பொருத்தும்படியான பற்களைப் பொருத்தலாம். இதுவும் சிலருக்குப் பிடிக்காது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு பற்களை பதிக்கும் முறையே (Teeth Implantation) சிறந்தது. இந்த செயற்கைப் பற்கள், இயற்கையான பற்களை போன்றே செயல்படும்.
ஒவ்வொரு தாடைக்கும் 4 முதல் 6 பதிக்கப்படும் பற்களைக் கொண்டு மொத்த பல் செட்டையும் நிலையானதாக பொருத்த முடியும். பொருத்தப்பட்டவர் இயற்கையான பற்களினால் கடிப்பது போல் உணர்வார்கள்.
எடுத்து மறுபடியும் வைக்கும் செயற்கைப் பல்லைக் காட்டிலும் நிலையாக பதிப்பது கொறிப்பதற்கு வசதியாக இருக்கும். பற்கள் ஆடுதல், ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் ஆகியவை நிலையாகப் பதிக்கும் செயற்கைப் பல்லால் தவிர்க்கப்படுகின்றன
0 comments:
Post a Comment