Pages

Subscribe:

Ads 468x60px

Sunday, 9 March 2014

உலகில் மனைவியை ஏமாற்றுவதில் எந்த நாட்டுகாரர் கில்லாடிகள் ?

பிரான்ஸ் கருத்துக் கணிப்பு நிறுவனம், மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்கள் குறித்த கருத்து கணிப்பை பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தியது.


4500 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து மனைவிக்கு துரோகம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ், இத்தாலி ஆண்கள்தான்.


இரு நாடுகளிலும் 55 சதவீதம் பேர், மனைவிக்கு துரோகம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, நடிகையும் காதலியுமான ஜுலி கயாத்துடன் இருப்பது போன்ற படங்கள் வெளியாயின.


இந்த படங்களால் ஹோலண்டேவுக்கும் அவரது மனைவி வலாரிக்கும் இடையிலான உறவு முறிந்தது. இந்த சூழ்நிலையில் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவு அதிபரும் விதிவிலக்கு அல்ல என்பதையே காட்டுகிறது.


இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமரும் அரசியல் தலைவருமான பெர்லுஸ்கோனியும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து புகாரில் சிக்கியவர்தான். சிறுமிகளுடன் உறவு வைத்ததாக கடந்த ஆண்டு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பெண்களை காதலிப்பது, உண்மையாக நடந்து கொள்வதில் இங்கிலாந்து ஆண்கள் முதலிடத்தில் உள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


எனினும் 42 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெர்மனியில் 46 சதவீதம் பேர் மனைவியை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment