சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கோச்சடையான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 11ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோச்சடையான் திரைப்படம் உலகெங்கும் சுமார் 6000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கோச்சடையான் திரைப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிந்ததும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடலாம் என்று நினைத்திருந்த ஒரு சில தயாரிப்பாளர்கள் உடனே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட முடிவு செய்துவருகின்றனர்.
ஆனால் விஷால்- லக்ஷ்மிமேனன் இணைந்து நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் திரைப்படம் கோச்சடையான் வெளியாகவுள்ள அதே ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் திரு அளித்துள்ள பேட்டியில், சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் நான் சிகப்பு மனிதன் திரைப்படம் வெளியாவதில் தனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார்.
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

0 comments:
Post a Comment