Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 11 September 2013

கடவுளும் தூதுவர்களும் - குட்டிக்கதைகள்!


கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"

சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.

அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.

பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்?

வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்." என்றார்.

Thursday, 11 July 2013

வேலைச்சுமையால் வாடுகிறீர்களா...?

அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது,
முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

பலபேருக்கும் வேலை, ஒரு பொதிபோல் வந்து விழுகிறது. அவர்களுடைய சொந்த வேலைகள்,

அவர்களை நோக்கி வந்த வேலைகள், அனாவசியமாய் பிறர் தந்த வேலைகள் இப்படி எல்லாத் திசைகளில் இருந்தும் வந்துகொண்டேயிருக்கிற வேலைகளால் இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைகள்கூட இமாலயப் பணிகளாய் தோற்றமளிக்கின்றன.

“என்னுடைய முகராசி! எல்லாரும் எல்லா வேலைகளையும் என்னிடமே தருகிறார்கள்” என்றொரு ஜோதிடரிடம் கேட்கப் போனார் ஒருவர். “உங்கள் முகராசி அப்படித்தான்! அதற்கு பரிகாரம் உண்டு. அடுத்த வாரம் வாங்க! இப்ப போகிறபோது அப்படியே என் டெலிபோன் பில்லைக் கட்டிடுங்களேன்… ப்ளீஸ்!” என்று தன் பங்குக்கு இன்னொரு வேலையைத் தந்தார் ஜோதிடர்.

அதிகமான வேலைப்பளு சுமப்பதை முகராசி என்பதை விடவும் “தலைராசி” என்று சொல்வதே பொருத்தம். வேண்டாத வேலை வழங்கப்படும்போது, தலையை இடதும் வலதுமாய் ஆட்டாமல் மேலும் கீழுமாய் ஆட்டி வைப்பதால் வரும் ஆபத்து இது.

அளவுக்கதிகமான வேலையை செய்வதால் ஒன்று அதிவிரைவில் சோர்வடைவீர்கள். அல்லது அரைகுறையாய்ச் செய்து அவப்பெருக்கு ஆளாவீர்கள்.
குடும்பத்துடன் சாப்பிடப் போகிறபோது கூட, தரவாரியாய் சிலவற்றை தேர்ந்தெடுக்கிறோம். முதல் விருப்பம், இந்த உணவகம். இல்லை யென்றால் அது. இரண்டிலும் இடமில்லை யென்றால் மூன்றாவது. இது போலவே வேலைகளையும் அவற்றின் முக்கியத்துவம், அவசரம், ஆதாயம் போன்ற அளவுகோல்களால் வகை பிரித்துப் பழகுங்கள். இதுவே, வேண்டியது வேண்டாதது என்று தேர்ந்தெடுக்கும் முன்பே முடிவெடுக்க உதவும்.

ஒரு மனிதருக்கு, தனிமனித நிலையில் – உறவுகள் சார்ந்து – வேலைகள் சார்ந்து என்று வெவ்வேறு கடமைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் அவசியமானவற்றை தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். உதாரணமாக, உங்கள் தம்பி மனைவியின் தங்கையின் நாத்தனாருக்கு நடக்கிற வளைகாப்பு வைபவத்துக்காக நீங்கள் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு பாரி முனையிலிருந்து பள்ளிக்கரணை போக வேண்டிய அவசியமில்லை.

குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிய விசேஷங்கள், குடும்பத்திலிருந்து யாரேனும் ஒருவர் சென்றுவர வேண்டிய விசேஷங்கள் என்று பகுத்துக் கொள்வதும் பலன் கொடுக்கும். செயல் திறன் உச்சத்துக்கு வரும் நேரம் எதுவென்று உங்களையே கேளுங்கள். ஒரு நாளில் உஷ்ண வெளிப்பாடு உச்சத்துக்கு வருகிற நேரம், மதியம் மூன்று மணி என்கிறார்கள். உங்கள் செயலாற்றல் சிறந்து விளங்குகிற நேரத்தை கணித்து, அதி முக்கியமான வேலைகளை அந்த நேரங்களில் வைத்துக் கொள்ளலாம்.

மனதை இலகுவாக்கிக் கொள்ளவென்று, சில பொழுதுபோக்குகள், சில சந்தோஷமான நிமிஷங்கள் அவசியம். அவை ஆக்கப்பூர்வமாய் இருக்கிறதா என்று பாருங்கள். அதற்கென ஒதுக்கிய நேரம் முடிவடைகிறபோது நீங்கள் உற்சாகமாய் இருக்கிறீர்களா, உள்ள உற்சாகத்தையும் இழந்து சோர்வடைகிறீர்களா என்று பாருங்கள்.

மறுநாள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி முதல்நாளே ஒரு பட்டியல் போடுங்கள். ஒரு நாளில் நடந்து முடிந்த சம்பவங்களை எழுத ஒரு டைரியும், அடுத்த நாளை முன் கூட்டியே திட்டமிட இன்னொரு டைரியும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது, முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

நாம் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் நாமே முடிவெடுப்பது நல்லது. ஒரு வேளை, அதற்கான சூழல் அமையவில்லை யென்றால், நாம் செய்ய வேண்டிய வேலைகளும் அதற்காக ஒதுக்குகிற நேரமும் நம்முடைய கட்டுப்பாட்டிலாவது இருப்பது அவசியம். வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Wednesday, 10 July 2013

சின்ன சின்ன யோசனைகள்!

புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும்.

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.


பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.